'இந்த குழந்தைங்க என்ன பாவம் பண்ணாங்க'!.. 'இந்த சின்ன வயசுல இவ்ளோ கஷ்டமா'!?.. ராணுவ வீரர்களின் இரக்க குணத்துக்கு குவியும் பாராட்டுகள்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற காத்திருக்கும் சிறுவர்களுடன் ராணுவ வீரர்கள் நடந்து கொண்ட விதம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

ஆப்கான் மக்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற காபூல் விமானத்தில் பல நாட்களாக பசி, தூக்கமின்றி காத்து கொண்டிருக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து நகரங்களும் தாலிபான்களின் வசம் சென்றுள்ளதால் அங்குள்ள மக்களின் நிலை பரிதாபமாக காட்சியளிக்கிறது.
தாலிபான்கள் குழந்தைகள், பெண்கள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் கடுமையான உத்தரவுகளால் ஒடுக்குகிறார்கள். இந்நிலையில், அவர்கள் ஆப்கானில் புதிய ஆட்சியை அமைக்க ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, ஆப்கன் மக்கள் உயிருக்கு பயந்து அமெரிக்க ராணுவப் படை உதவியை பயன்படுத்தி, வெவ்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.
இதற்கிடையே, காபூல் விமான நிலையத்தில் பல நாட்களாக பசியோடு காத்திருக்கும் குழந்தைகளுக்கு சாப்பிட உணவு, தண்ணீர் போன்றவற்றை அமெரிக்க ராணுவ வீரர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.

மற்ற செய்திகள்
