'இப்படி ஒரு செய்தி வரும்ன்னு கனவுல கூட நினைக்கல'... 'பேரதிர்ச்சியில் கமலா ஹாரிஸ்'... கொந்தளிக்கும் அமெரிக்க மக்கள்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Aug 20, 2021 02:24 PM

ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதற்கு முழு முக்கிய காரணம் அமெரிக்கா தான் என்ற குரல் அந்நாட்டில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

Majority thinks second in line Kamala unprepared to be president

ஆப்கானிஸ்தானில் இருக்கும் தனது படைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்தது. 90 சதவீத படைகள் தாய் நாட்டிற்குத் திரும்பி விட்ட நிலையில், தாலிபான்கள் தங்களது ஆட்டத்தை ஆரம்பித்தார்கள். தற்போது முழு ஆப்கானிஸ்தானும் அவர்களது கைகளுக்குச் சென்று விட்ட நிலையில், இனிமேல் என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு அந்நாட்டு மக்களிடையே நிலவுகிறது.

Majority thinks second in line Kamala unprepared to be president

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற ரீதியில் மக்கள் அமெரிக்க விமானத்தில் ஏறிய காட்சிகளைப் பார்த்து உலகமே கண்ணீர் வடித்தது. இனிமேல் தங்களது எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்ற அச்சத்தில் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய காட்சிகளைப் பார்த்த உலக மக்கள் பலரும், ஆப்கான் மக்களின் இந்த நிலைக்கு அமெரிக்கா தான் காரணம் எனக் குற்றம் சாட்டினார்கள்.

இதே குரல் தான் தற்போது அமெரிக்காவில் எங்குப் பார்த்தாலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு எதிர்பாராதவிதமாக இந்திய வம்சாவளியினரான அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Majority thinks second in line Kamala unprepared to be president

கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 49 சதவிகிதம் அமெரிக்கர்கள் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராவதற்குத் தகுதியுடையவர் எனக் கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால், அமெரிக்கா தன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு மக்களுடைய ஆதரவு குறைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளை முழுமையாக வாபஸ் பெறுவது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பதற்கு முன், அதிபருடன் அந்த அறையிலிருந்த கடைசி நபர் நான்தான் எனப் பெருமையாகக் கூறியிருந்தார் கமலா. ஆனால், அந்த முடிவு தனது செல்வாக்கை இந்த அளவிற்குப் பாதிக்கும் என கமலா கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

Majority thinks second in line Kamala unprepared to be president

ஏப்ரலில் கமலா ஹாரிஸ் அதிபராவதற்குத் தகுதியுடையவர் என 49 சதவிகிதம் மக்கள் வாக்களித்திருந்த நிலையில், இப்போது 47 சதவிகிதம் பேர், கமலா அதிபராவதற்குத்  தகுதியில்லாதவர் என வாக்களித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில், எந்த நிகழ்ச்சியானாலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அருகிலேயே நிற்கும் கமலா, ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டுவதில்லை என்ற பரவலாகப் பேசப்படுகிறது.

Majority thinks second in line Kamala unprepared to be president

அரசியலில் தவறாக எடுக்கப்படும் முடிவு, ஒரே நாளில் இதுவரை சம்பாதித்து வைத்திருந்த செல்வாக்கைத் தவிடு பொடியாக்கும் என்பதற்கு இந்த விவகாரம் ஒரு உதாரணம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Majority thinks second in line Kamala unprepared to be president | World News.