'ஒரு வருஷமா எல்லாரோட கண்ணுலையும் மண்ண தூவி...' 'வீட்டுக்கடியில பாதாள அறை அமைத்து...' - நெஞ்சை உறைய செய்யும் 'படுபயங்கர' செயல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆஸ்திரியாவை சேர்ந்த ஒருவர் வீட்டுக்குள் பாதாள அறை அமைத்து ஒரு வருடமாக செய்து வந்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரியா நாட்டின் மேற்கு டைரோல் பகுதியில் வசித்து வந்த 89 வயதான மூதாட்டியின் ஒய்வூதியத் தொகையை வழங்குவதற்காக தபால்காரர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் இருந்த 66 வயதான அந்த மூதாட்டியின் மகன் அவருக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, தன்னிடம் பணத்தை தருமாறு கூறியுள்ளார். ஆனால், தபால்காரர் மூதாட்டியை கண்ணால் பார்த்தால் மட்டுமே பணத்தை தருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர வைக்கும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வருடம் ஜூன் மாதம் அந்த மூதாட்டி காலமாகி உள்ளார். இந்த சம்பவத்தை அவரது மகன் வெளியே யாரிடமும் சொல்லவில்லை. தன்னுடைய அம்மாவின் உடலை அடக்கம் செய்வதற்கு பதிலாக, தனது வீட்டினுள் பாதாள அறை அமைத்து ஒரு வருடத்திற்கு மேலாக தாயின் உடலை ஐஸ்கட்டிகள் மற்றும் பேண்டேஜ்களை கொண்டு பதப்படுத்தி பாதுகாத்து வந்துள்ளார்.
அதோடு, உடலில் இருந்து துர்நாற்றம் வராமலும் பாத்துக்கொண்டார். கடந்த ஓராண்டு காலத்தில் தாயின் ஓய்வூதியத் தொகையாக 50 ஆயிரம் டாலர் (சுமார் ரூ. 43.4 லட்சம்) தொகையை அவர் பெற்றுள்ளார்.
புதிதாக வந்த தபால்காரரினால் தற்போது வசமாக சிக்கியுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
