நான் உன்ன பெத்த அம்மாடா...! மகன் சொன்ன 'அந்த ஒரு வார்த்தை'... 'அதிர்ந்து போன மருத்துவர்கள்...' - இப்படியெல்லாம் கூடவா இருப்பாங்க...?
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 13-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் சிங்காட் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டிக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்காரணமாக மூதாட்டி சிங்காட் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கொரோனா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்ட பாட்டியை கடந்த செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்துள்ளது மருத்துவமனை.
இதனால் மருத்துவமனை நிர்வாகம், அந்த மூதாட்டியின் மகனை அழைத்து தாயை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி தெரிவித்த போது அந்த மூதாட்டியின் மகன் 'எங்களால் அங்கு வர முடியாது. வீட்டிற்கும் அழைத்து செல்ல மாட்டோம்' என கூறியுள்ளார்.
இதுகுறித்து கூறிய அம்மருத்துவமனையின் டாக்டர் சுபாங்கி ஷா, 'கொரோனாவில் இருந்து மீண்டு வந்த மூதாட்டியை அவர்களின் குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து செல்ல மறுத்துவிட்டனர். நாங்கள் அவரது தாயை எங்கு அனுப்புவது என்று கேட்டபோது, வீதியில் விட்டுவிடும்படி அலட்சியமாக பதிலளித்தார். இது எங்களுக்கு மேலும் அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் சிங்காட் பகுதி காவல்துறையினரை உதவிக்கு அழைத்தோம்' எனக் கூறினார்.
அதன்பின் மருத்துவமனை நிர்வாகம் சிங்காட் போலீசாரின் உதவியுடன் அவரை வீட்டிற்கு அழைத்து சென்ற போது அவர்களின் வீடு பூட்டப்பட்டு இருந்தது. பாட்டியின் மகனை தொடர்பு கொண்டதில் இரவு 8 மணிக்கு தான் வருவோம் என தெரிவித்துள்ளனர்.
இரவு வரை பாட்டி வீதியில் நிற்கவைப்பது அதுவரை அங்கேயே நிற்கவைப்பது கடினம் என கருதி போலீசார் மீண்டும் மருத்துவமனைக்கே அழைத்து வந்தனர். மறுநாள் போலீசார் மூதாட்டியின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு தீவிர ஆலோசனை வழங்கி மூதாட்டியை அவரின் வீட்டிற்கே திரும்பி அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து கூறிய தேவிதாஸ் கெவாரே என்ற போலீஸ் அதிகாரி, 'பாட்டியின் மருமகள் தன் தந்தை இறந்து விட்டதால், மாமியாரை வீட்டுக்கு அழைக்க முடியவில்லை என்றும், தான் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரின் குடும்பத்தாரும் கொரோனா அச்சம் கருதி எழுந்த பதற்றத்தில் எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்' என்றார்.
கொரோனா அச்சத்தால் சொந்த மகனே தன் தாயை வீதியில் விடச்சொன்ன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
