சிறுமியின் உயிரை காப்பாற்றிய வாட்ச்.. சரியான நேரத்துல கொடுத்த வார்னிங்.. செக் பண்ணப்போ தெரியவந்த அதிர்ச்சி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Oct 23, 2022 01:11 PM

அமெரிக்காவில் சிறுமி ஒருவரின் உயிரை காப்பாற்றி இருக்கிறது ஆப்பிள் வாட்ச். இதன்மூலம் தக்க நேரத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உடல்நிலை சீராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Apple Watch helps detect rare cancer in USA girl

தொழில்நுட்ப வளர்ச்சி மனித குலத்திற்கு பெரும் கொடைகளை அளித்திருக்கிறது. இதன் காரணமாக மக்களின் தேவைகளுக்கு ஏற்றபடி, புதிய புதிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த அந்த வகையில் ஆப்பிள் வாட்ச்கள் மக்களிடையே பெரும் பிரபலமாகி வருகிறது. இதில் பல வசதிகளையும் அளித்திருக்கிறார்கள் நிறுவனத்தினர். இதற்காகவே, இந்த வாட்ச்களை வாங்க மக்கள் அலைமோதுகின்றனர்.

இதனிடையே அமெரிக்காவை சேர்ந்த சிறுமி ஒருவருடைய உயிரை காப்பாற்றியுள்ளது ஆப்பிள் வாட்ச். அமெரிக்காவின் டெட்ராய்ட் மாகாணத்தை சேர்ந்தவர் ஜெசிகா கிட்சன். இவருடைய மகள் இமானி மைல்ஸ். சமீபத்தில் இமானியின் கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் தொடர்ந்து சத்தம் எழுப்பிக்கொண்டே இருந்திருக்கிறது. செக் செய்தபோது சிறுமியின் இதயத் துடிப்பு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாக வாட்ச் சுட்டிக்காட்டவே இருவரும் சந்தேகமடைந்தனர்.

இதனை தொடர்ந்து, மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ஜெசிகா. அங்கே இமானியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு appendix-ல் கேன்சர் கட்டி இருப்பதை அறிந்திருக்கின்றனர். neuroendocrine tumour எனப்படும் இந்த கேன்சர் கட்டியை அகற்ற உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து இமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பேசிய இமானியின் தாய் ஜெசிகா,"அது வித்தியாசமாக இருந்தது. இதற்கு முன்னர் இப்படி நடந்தது இல்லை. என் மகளின் இதயத் துடிப்பு சீரற்று இருப்பதாக வாட்ச் சுட்டிக்காட்டியது. உடனடியாக அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது நடந்த பரிசோதனையில் அவருக்கு கேன்சர் இருப்பது தெரிய வந்தது. குழந்தைகளுக்கு இந்த வகை கேன்சர் வருவது அரிதானது என டாக்டர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வாட்ச் இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என யோசிக்கவே அச்சகமாக இருக்கிறது" என்றார். இந்நிலையில் சிறுமி இமானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags : #APPLEWATCH #CANCER #HEARTBEAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Apple Watch helps detect rare cancer in USA girl | World News.