தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பிரபலமான கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர்.

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறுமியின் இறப்பு செய்தியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று அறிவித்திருந்தார்.
அந்த துயர செய்தியை தனது இன்ஸ்டாகிராம் & முகநூல் பக்கத்தில் வீடியோ & புகைப்படங்கள் வழியாக பகிர்ந்துள்ளார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நட்சத்திரம் டேவிட் மில்லர் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ள ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்றுள்ளார். இன்று நடைபெறும் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மில்லர் பகிர்ந்த வீடியோவில் சிறுமியின் மரணச் செய்தியை எழுதியுள்ளார். அந்த பதிவில், " "ரிப் மை டியர் இளவரசி, உன் மீதான அன்பு எப்போதும் இருக்கும்!". என டேவிட் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "உன்னை மிகவும் மிஸ் செய்யப் போகிறேன் மை ஸ்கட்! நான் அறிந்ததிலேயே பெரிய இதயம் நீ. நீ எப்போதும் நம்பமுடியாத அளவிற்கு நேர்மறையாகவும் உன் முகத்தில் புன்னகையுடனும் சண்டையை வேறு நிலைக்கு கொண்டு செல்வாய். உனக்கு ஒரு குறும்பு பக்கம் உண்டு. உன் பயணத்தில் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு சவாலையும் ஏற்றுக்கொண்டாய். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி நீ எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தாய்! உன்னுடன் ஒரு பயணம் நடந்ததை நான் தாழ்மையுடன் உணர்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்! RIP" என டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த சிறுமி புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் புற்றுநோய் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் மில்லர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Annie என்ற அந்த சிறுமி டேவிட் மில்லரின் நண்பரின் மகள் என்றும் டேவிட் மில்லரின் அதிதீவிர ரசிகை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்
