ஆப்பிள் OFFICE-ல வெள்ளை நிற பவுடர் பாக்கெட்.. ஊழியர்களை உடனே வெளியேறச் சொன்ன மீட்புப்படை.. என்ன ஆச்சு..?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Mar 16, 2022 07:20 PM

அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் வெள்ளை நிற பவுடருடன் ஒரு கவர் கிடந்ததால் உடனடியாக ஊழியர்கள் அனைவரும் அலுவலக கட்டிடத்தில் இருந்து வெளியேறினர்.

Apple campus emptied white powder stuff found

விமானத்துல விடாம அழுதுகிட்டே இருந்த குழந்தை... பயணிகள் செஞ்ச ஸ்வீட் வைத்தியம்.. வைரலாகும் க்யூட் வீடியோ..!

ஆப்பிள் நிறுவனம்

உலக டெக்னாலஜி துறையில் ஜாம்பவானாக அறியப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று கவர் ஒன்று கீழே கிடந்திருக்கிறது. பாதி திறந்த நிலையில் கிடந்த அந்தக் கவரில் வெள்ளை நிற துகள்கள் இருந்ததாக கூறுகின்றனர் அதனை முதலில் பார்த்த ஊழியர்கள்.

இதனால் அச்சம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக அலுவலகத்தில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். இதுகுறித்து, சாண்டா கிளாரா கவுண்டியில் அமைந்து உள்ள தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

Apple campus emptied white powder stuff found

விரைந்து வந்த மீட்புப்படை வீரர்கள், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெள்ளை நிற துகளுடன் கிடந்த கவரை கைப்பற்றிய வீரர்கள் அதை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

ஆபத்தானது இல்லை

ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து எடுக்கப்பட்ட வெள்ளை நிற துகள்கள் ஆபத்தானவை அல்ல என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், கவரில் இருந்தது என்ன? என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்த வெள்ளை நிற துகளுடன் கிடந்த கவர் ஏற்படுத்திய களேபரம் காரணமாக அலுவலகத்தின் பாதி பகுதியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

Apple campus emptied white powder stuff found

ஆப்பிள் அலுவலகத்தின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்ட துகள் ஆபத்தானது அல்ல என அதிகாரிகள் அறிவித்ததை அடுத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.

முடிவிற்கு வரும் வொர்க் ஃப்ரம் ஹோம்

2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து உடனடியாக தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியும்படி உத்தரவிட்டது ஆப்பிள் நிறுவனம். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி அனைத்து ஊழியர்களையும் அலுவலகத்திற்கு வரும்படி அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. இதன் இடையே ஆப்பிள் நிறுவனத்தில் வெள்ளை துகளுடன் கிடந்த கவரால் ஊழியர்கள் வெளியேறிய சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி ரஷ்யாவை நம்ப முடியாது.. இங்கிலாந்து அதிபர் எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!

Tags : #APPLE CAMPUS #WHITE POWDER STUFF #APPLE OFFICE #USA #ஆப்பிள் நிறுவனம் #ஊழியர்கள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Apple campus emptied white powder stuff found | World News.