'வீட்டின் கதவை உடைத்த கிறிஸ்துமஸ் தாத்தா'... 'கொத்தாக சிக்கிய மொத்த குடும்பம்'... பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Dec 18, 2020 12:48 PM

போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்ய பல்வேறு புதிய உத்திகளைப் பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து குற்றவாளிகளைக் கைது செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Cops dressed as Santa Claus and elf detain suspected drug dealer

பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. ஆனால் போலீசார் வருகிறார்கள் என்பதை அறிந்து கொண்டால் அந்த மொத்த கும்பலும் நிச்சயம் தப்பி விடும். அப்போது என்ன செய்யலாம் என போலீசார் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களது எண்ணத்தில் உதித்த திட்டம் தான் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் நிச்சயம் யாருக்கும் சந்தேகம் வராது என முடிவு செய்து அந்த திட்டத்தைச் செயல்படுத்தினார்கள்.

இதற்காக இரண்டு போலீஸ் அதிகாரிகள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து போதைப்பொருள் கும்பல் பதுங்கி இருந்த வீட்டின் அருகே வாகனத்தில் சென்றனர். கடத்தல் கும்பல் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய அந்த இரண்டு போலீசாரும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகக் கிறிஸ்துமஸ் தாத்தா உடையுடன் புறப்பட்டனர். கடத்தல் கும்பல் தங்கியுள்ள வீட்டை நெருங்கியவுடன், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சுத்தியலால் கதவை உடைக்க தொடங்கினார்.

Cops dressed as Santa Claus and elf detain suspected drug dealer

கதவை உடைத்து வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறை அதிகாரிகள், அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்தார்கள். உடனடியாக அந்த கடத்தல் கும்பலைக் கைது செய்ய போலீசார் அவர்களிடம் இருந்து கிலோ கணக்கில் போதைப்பொருளைக் கைப்பற்றினர். மேலும், துப்பாக்கி உள்படப் பயங்கர ஆயுதங்களையும் கைப்பற்றினர்.

Cops dressed as Santa Claus and elf detain suspected drug dealer

இதையடுத்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களைச் சிறையில் அடைத்தனர். போலீசார் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த போலீசார் போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கைது செய்யும் வீடியோ சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Cops dressed as Santa Claus and elf detain suspected drug dealer | World News.