'பறவைக் கூட்டத்தில் மோதிய விமானம்...' திடீர்னு எஞ்சின்ல இருந்து...' - பதறிப்போன 'விமானி' செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்விமானங்களின் மீது பறவை மோதுவது வாடிக்கையான ஒன்று. விமானத்தின் மீது பறவைகள் மோதும் போது, அதனால் அதன் உடல் பகுதி மீது ஏற்படும் பாதிப்புகள், விரிசல்கள் ஆகியவை பெரும் பாதிப்பை உருவாக்கும்.
அதோடு மட்டுமல்லாமல், பறவைகள் இஞ்சினுக்குள் சிக்கினால் இஞ்சின் செயல் இழந்து பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம். இது பயணிகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை உருவாக்கி விடும்.
அண்மையில் அப்படி ஒரு சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது. பறந்து கொண்டிருந்த விமானத்தின் மீது பறவைகள் கூட்டம் ஒன்று மோதியதை அடுத்து, விமானத்தின் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. பறவைகள் மோதிய பின்னர், விமானத்தின் கண்ணாடியில் அதன் ரத்தத் துளிகள் சிறகுகளும் காணப்பட்டன. இதன் காரணமாக வெளியே விமானியால் பார்க்க கூட முடியாமல் போய்விட்டது.
இத்தாலியில் உள்ள போலோக்னா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, ரியானேர் ஜெட் விமானம் மீது ஹெரான் பறவைகள் கூட்டம் மோதியது. ரயன்ஏர் போயிங் 737- 800 விமானம் பயணிகளுடன் லண்டனில் இருந்து புறப்பட்டுள்ளது.
அப்போது ஹெரான் பறவைகள் மீது மோதியதில் விமானத்தின் கண்ணாடியில் ரத்தக்கறை படிந்துள்ளது. விமானத்தின் பல பகுதிகளில் பறவைகளின் இறகுகள் சிக்கின. பல பறவைகள் என்ஜினிலும் நுழைந்ததால், அங்கு தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
இன்ஜினில் இருந்து தீ ஜூவாலைகள் வெளியே வந்து கொண்டிருந்தது. விமானம் இத்தாலிய விமான நிலையத்தின் ஓடுபாதையை அடைவதற்கு முன்பு பறவைகள் கூட்டம் மோதியது, ஹெரான்களின் இரத்தம் ஜன்னல்களிலும் தெறித்தது. விமான இயந்திரம் கடுமையாக சேதம் அடைந்தது.
விமானியின் புத்திசாலித்தனமான நடவடிக்கை காரணமாக விமான விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தின் இஞ்சினில் இருந்து தீப்பிழம்புகள் காற்றில் பறந்த சூழ்நிலையில் விமானி கவனமாக விமானத்தை தரையிறக்கினார்.
அதனால், அங்கிருந்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.