"தமிழகத்தன் 6 மாநகராட்சிகளில் மீண்டும் பழைய ஊரடங்கு!"... "இன்று ஒருநாள் மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் இருக்கும்!.. குவியும் மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 29, 2020 01:35 PM

சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சி பகுதிகளில் இன்று (29.04.2020) புதன்கிழமை இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கும் முடிவடையும் நிலையில், நாளை(30.04.2020) முதல் 26.04.2020க்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

no complete lockdown extension from tomorrow, says TN Govt

எனினும் 30.04.2020 வியாழக்கிழமை அன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களான காய்கறி பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்றும், அதேசமயம் 1.5.2019 வெள்ளிக்கிழமை முதல் மேற்கண்ட அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும் அதி தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்த்தொற்று என்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல் நிதானமாக, பொறுமையாக, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து, முக கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருமாறு அறிவுறுத்தப்படுவதாக தமிழக அரசு  தெரிவித்துள்ளது.