‘டிக்டோக்’ மோகத்தால்.. ‘ரயில் எஞ்சின் மேல் ஏறிய..’ சிறுவனுக்கு நடந்த பரிதாபம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Aug 05, 2019 05:04 PM
கான்பூரில் டிக்டோக் வீடியோ எடுப்பதற்காக ரயில் எஞ்சின் மீது ஏறிய சிறுவன் உயர்மின்னழுத்தக் கம்பி பட்டு தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கான்பூர் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் எஞ்சின் மீது ஒரு சிறுவன் கையில் செல்ஃபோனுடன் ஏறியுள்ளார். டிக்டோக் வீடியோ எடுப்பதற்காக ஏறிய அவர் வீடியோ நன்றாக வர வேண்டும் என்ற ஆர்வத்தில் கை, கால்களை நீட்டியபடி வீடியோ எடுத்துள்ளார்.
அப்போது தலைக்கு மேலே சென்று கொண்டிருந்த 25,000 வோல்ட் மின்சாரக் கம்பியின் மீது அவருடைய கை பட்டுள்ளது. இதில் அதிக மின்சாரம் தாக்கி சிறுவன் ரயில் எஞ்சினில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டுள்ளார். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.
டிக்டாக் வீடியோ எடுக்க ரயில் மீது ஏறிய சிறுவன் 25,000 வோல்ட் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான்... வெளியான பதைபதைக்கும் காட்சி..https://t.co/3v5L32GOYJ pic.twitter.com/eQqlOtJBeH
— News18 Tamil Nadu (@News18TamilNadu) August 5, 2019