கண் இமைக்குறதுக்குள்ள 4 'இஞ்ச்' உள்ள போய்டுச்சு...! 'பாய்ந்து வந்த அம்பு...' அம்பின் முனைப்பகுதியில் இரும்பு இருந்ததால் நடந்த விபரீதம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுவனின் தலையில் 4 அங்குல அளவிற்கு பாய்ந்திருந்த அம்பு அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டது.
![4-inch to 3-year-old boy\'s head was flowed Arrow surgery. 4-inch to 3-year-old boy\'s head was flowed Arrow surgery.](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/4-inch-to-3-year-old-boys-head-was-flowed-arrow-surgery.jpg)
மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதியில் 3 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அவன் மீது அடையாளம் தெரியாத ஒரு நபர் மிக நெருங்கிய நிலையில் இருந்து அம்பு ஒன்றை எய்துள்ளதாக கூறப்படுகிறது.
கண் இமைக்கிற நொடியில் அந்த அம்பு சிறுவனின் தலையில் 4 அங்குல ஆழத்தில் பாய்ந்தது. இதன்பின்பு அலிராஜ்பூர் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அதனை நீக்க முயன்றுள்ளனர். ஆனால் இந்த முயற்சி பலனளிக்கவில்லை. இதில், அம்பின் மூங்கில் பகுதி உடைந்தது. ஆனால், அம்பின் இரும்பு பகுதி சிறுவனின் தலையின் உள்ளேயே இருந்தது. இதன்பின் மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றார்கள்.
8 பேர் கொண்ட மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அறுவை சிகிச்சையின் மூலம் சிறுவனின் தலையில் இருந்து அம்பினை நீக்கியது. சிகிச்சைக்குப்பின் சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)