'கட்டின புருஷன்னு நம்பி வந்தனேடா!'.. மனைவியை மது அருந்தச்செய்து... நண்பர்களோடு 'படுபாதக' செயலைச் செய்த கொடூரன்!.. நெஞ்சை உலுக்கிய பயங்கரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் 25 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 25 வயது பெண்ணிற்கு அவரது கணவரே வலுக்கட்டாயமாக மதுக் கொடுத்துள்ளார். பிறகு தனது 5 வயதுக் குழந்தை முன்பே, நான்கு நண்பர்களுடன் சேர்ந்து தனது மனைவியையே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தையையும் அந்த மனிதாபிமானமற்ற கும்பல் அடித்துத் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் அளித்த தகவலின்படி, என்னையும் என் இரு குழந்தைகளையும், என் கணவர் புதுக்குறிச்சி கடற்கரை அருகேயுள்ள ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு வலுக்கட்டாயமாக மதுவைக் கொடுத்தனர். பிறகு என்னை என் மூத்த மகன் முன்பே அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர் எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேசிய பாதிக்கப்பட்ட பெண், தன்னை கணவர் சிகரெட் நெருப்பால் சுட்டுக் காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்து தப்பி வந்து சாலையில் உதவிக்காக நின்ற அந்தப்பெண்ணை வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் மீட்டு வீட்டிற்கு அழைத்துச்சென்றுள்ளார். மேலும், இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளித்துள்ளார். இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
