'கையில கத்தியோட .. அந்த STREET-ல சுத்திகிட்டு இருக்கு சார்!'.. POLICE-க்கு வந்த 'அதிர்ச்சி' PHONE CALL!.. 24 வயது 'இளம்பெண்' செய்த 'பதைபதைப்பு' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 31, 2020 05:29 PM

கனடாவில் 24 வயது இளம்பெண் ஒருவர் 41 வயது பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 yrs old woman stabbed another woman in Sherbourne street canada

கனடாவின்  Torontoக்கு உட்பட்ட  Sherbourne மற்றும் Dundas தெருவில் கடந்த புதன்கிழமை இளம்பெண் ஒருவர் கையில் கத்தியுடன் நடந்து செல்வதாக பரபரப்பு தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துசென்று பார்த்தபோது 41 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். 

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த அந்த பெண்ணைப் பற்றி விசாரித்தபோதுதான், அப்பெண்ணின் பெயர் Tara Morton (41) என்றும் அவரை கொலை செய்த என்கிற பெண் தேடப்படும் குற்றவாளியான Oleesia Langdon (24) என்றும் தெரிய வந்தது.

இதனிடையே Oleesia Langdon தானாகவே போலீசில் வந்து சரணடைந்ததை அடுத்து, அவரை போலீஸார் கைது செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 24 yrs old woman stabbed another woman in Sherbourne street canada | World News.