Kadaisi Vivasayi Others

எனக்கு 19, அவனுக்கு 13.. நாங்க 2 பேரும் 'TWINS'.. தலைச் சுற்ற வைத்த பெண்.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Feb 09, 2022 09:57 PM

19 வயது ஆகும் இளம் பெண் ஒருவர், அதிக வயது வித்தியாசமுள்ள இளைய சகோதரனை, தன்னுடைய இரட்டை சகோதரன் என தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

19 yr old woman says that her 13 yr old brother is her twin

இரட்டையர்கள் என்றால், ஒரே நேரத்தில் கருவாக உருவாகி, சில மணி நேர வித்தியாசத்தில் பிறப்பவர்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

பார்ப்பதற்கு ஒரே போல தோன்றும் அவர்களை சில சமயத்தில், நம்மால் அடையாளம் கூட கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.

நாங்கள் இரட்டையர்கள்

அப்படி ஒரே நாளில் பிறந்தவர்களும், பார்ப்பதற்கு ஒரே போல இருப்பவர்கள் தான் இரட்டையர்கள் என்ற நிலையில், இரட்டையர்களுக்கு புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார் ஒரு இளம் பெண். அன்னா ஹிப்கின் என்ற பெண் ஒருவர், தானும், தன்னுடைய இளைய சகோதரரும் உண்மையில் இரட்டையர்கள் என தெரிவித்துள்ளார். அன்னாவுக்கு தற்போது 19  வயது ஆகிறது. தன்னுடைய இரட்டை சகோதரர் என கூறும் சிறுவனுக்கு 13 வயது தான் ஆகிறது. இந்த விஷயம் தான் தற்போது நெட்டிசன்களை குழப்பம் அடையச் செய்துள்ளது.

13 வயது சகோதரன்

இது பற்றி பேசும் அன்னா, 'எனக்கும், என்னுடைய இளைய சகோதரருக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும், டெக்னிக்கலாக அவர் என்னுடைய இரட்டை சகோதரர் தான். ஏனென்றால், நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் தான் கருத்தரிக்கப்பட்டோம். விவாகரத்து பெற்ற எனது பெற்றோர்களுடன் இருந்து, உணவு அருந்தும் சமயத்தில், சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த போது, என்னுடைய 13 வயது சகோதரன், நிஜத்தில் என்னுடைய இரட்டை சகோதரன் என்பது தெரிய வந்தது' என டிக் டாக் வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

IVF முறை

அன்னாவின் இந்த வீடியோவால், பலரும் குழம்பிப் போயினர். அது எப்படி சாத்தியமாக இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர். தொடர்ந்து, தன்னுடைய அடுத்த வீடியோவில் இது பற்றி பேசிய அன்னா, 'நீங்கள் எவ்வளவு பேர் இதனை நம்புவீர்கள் என தெரியவில்லை. ஆனால், நான் உண்மையாக கூறுகிறேன். நானும், எனது சகோதரரும் ஒரே நேரத்தில் தான் கருத்தரிக்கப்பட்டோம். ஆனால், எனது கருவை மட்டும் IVF முறையில் எங்களின் தாய் சுமந்தார். தம்பியின் கரு, ஃப்ரீசரில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

6  ஆண்டுகள் இடைவெளி

பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, அவனுடைய கருவை எனது தாய் IVF முறையில் சுமக்கத் தொடங்கினார். 9 மாதங்களுக்கு பிறகு, எனது தம்பியும் பிறந்தான். இதனால், எங்கள் இருவருக்கும் சுமார் 6 ஆண்டுகள் இடைவெளி உருவானது. நிஜத்தில், நாங்கள் ஒரே மாதிரியான இரட்டையர்கள் கிடையாது. ஆனால், உயரியல் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக நாங்கள் இரட்டையர்கள்' என அன்னா தெரிவித்துள்ளார்.

வைரலான வீடியோ

தொடர்ந்து, அன்னாவின் டிக் டாக் வீடியோ, மிக வேகமாக வைரலாக தொடங்கியுள்ளது. இது பற்றி, பலரும் பல விதமான கமெண்ட்டுகளை தெரிவித்து வருகின்றனர். IVF முறையில் பிறந்த நீங்கள், இரட்டையர்கள் கிடையாது என்றும், உங்களுடைய லாஜிக் படி பார்த்தால், அனைத்து உடன் பிறப்புகளும் இரட்டையர்கள் தான் என்றும் பல விதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

நெட்டிசன்கள் கருத்து

இரட்டையர்கள் என்றால், ஒரே நேரத்தில் கருவுற்று, ஒரே நேரத்தில் பிறப்பது தான். ஆனால், மற்ற உடன் பிறப்புகளை போல தான் நீங்களும் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர். எனினும், இந்த பெண்ணின் வீடியோ மற்றும் செய்தி, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

Tags : #TWINS #ANNA HIPKIN #VIRAL VIDEO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 19 yr old woman says that her 13 yr old brother is her twin | World News.