Naane Varuven D Logo Top

160 வருசத்துக்கு முன்னாடி வரைஞ்ச ஓவியம்.. "பொண்ணு கையில போன் தான் இருக்குது??"... பரபரத்த நெட்டிசன்கள்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Oct 06, 2022 05:14 PM

இன்றைய காலகட்டத்தில், அனைவரும் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தினை செலவிடுவதால் உலகில் நடக்கும் ஏராளமான விஷயங்கள் தொடர்பாக நிறைய செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவை வித விதமாக ரவுண்டு அடிப்பதை நாம் பார்த்திருப்போம்.

160 year old painting viral on social media by time travel theory

Also Read | "யப்பா, என்ன ஷாட் இது?".. வெஸ்ட் இண்டீஸ் வீரர் அடிச்ச அந்த ஒரு 'சிக்ஸ்'.. வீடியோ'வ பாத்து அரண்டு போன ரசிகர்கள்!!

அது மட்டுமில்லமால், எதாவது ஒரு இணையவாசி குறிப்பிட்ட விஷயம் குறித்து தனது கருத்துக்களை பகிர ஆரம்பிக்கவே அது அடுத்த சில மணி நேரங்களிலேயே உலக அளவில் பேசு பொருளாக கூட மாறும்.

இதனிடையே, சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஒரு ஓவியம் குறித்து தற்போது நெட்டிசன்கள் தெரிவித்து வரும் கருத்தும் அதன் பின்னால் உள்ள காரணமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1860 ஆம் ஆண்டு, பிரபல ஓவியரான Ferdinand George Waldmüller, "The Expected One" என்ற பெயரில் ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார். இந்த ஓவியத்தில் பெண் ஒருவர் சிறு வழி பாதை ஒன்றில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவரது பார்வை அவரின் கையில் உள்ள பொருள் ஒன்றின் மீது இருக்க, அவரிடம் இருந்து ஒரு சில அடிக்கு முன்னால், இளைஞர் ஒருவர் பூவுடன் தனது காதலை வெளிப்படுத்தும் வகையில் காத்துக் கொண்டிருப்பது போல அந்த புகைப்படம் அமைந்திருக்கும்.

சுமார் 160 ஆண்டுகளுக்கு முன்பாக வரையப்பட்ட ஓவியம், தற்போது இணையத்தில் வைரலாகி வருவதற்கான காரணம் என்னவென்றால், அந்த பெண் கையில் வைத்திருக்கும் பொருள் தான். இந்த ஓவியத்தை காணும் பலரும் அவரது கையில் ஐபோன் இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர். ஐபோன் அல்லது வேறு ஏதோ ஒரு போனாக கூட இருக்கலாம் என குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும், தற்போது மக்கள் மத்தியில் இந்த மொபைல் போன் என்பது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், 160 ஆண்டுகளுக்கு முன்பே அதனை கணித்து வரைந்துள்ளார் என சில நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இன்னும் பல ஒரு படி மேலே போய், டைம் டிராவல் தியரி வரைக்கும் இந்த ஓவியத்துடன் ஒப்பிட்டு குறிப்பிட்டு வருகின்றனர்.

160 year old painting viral on social media by time travel theory

இப்படி 1860 ஆம் ஆண்டு வரையப்பட்ட ஓவியம், சம காலத்துடன் ஒப்பிட்டு கருத்துக்கள் பகிரப்பட்டு வந்த நிலையில், ஓவியத்தில் பெண்ணின் கையில் என்னவாக இருக்கும் என்பது பற்றி சில நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி, 1850, 60 களில் அனைவரின் கைகளிலும் பாடல் அல்லது பிரார்த்தனை புத்தகம் குட்டியாக இருந்தது என்றும் அதனைத்தான் அந்த பெண் பார்த்துக் கொண்டு செல்கிறாரே தவிர ஸ்மார்ட்  போன் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். இருந்த போதும் தொடர்ந்து இந்த புகைப்படம் குறித்து பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "பல வருசமா அந்த பங்களா அப்படியே தான் இருக்கு".. மேப் மூலம் தெரிய வந்த 'மர்மம்'!!.. ஊர் மக்கள் சொல்லும் பரபரப்பு காரணம்!

Tags : #PAINTING #SOCIAL MEDIA #TIME TRAVEL THEORY #ஓவியம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 160 year old painting viral on social media by time travel theory | World News.