'பாஸ்போர்ட் கொடுக்குறதுக்கு முன்னாடி...' 'அவங்களோட சோசியல் மீடியா அக்கவுண்ட் எல்லாத்தையும்...' - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநிலம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இனி பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்பவர்களின் சமூக ஊடக நடத்தைகளும் இனி ஆராயப்படும் என்று உத்தரகாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

சாதாரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல பாஸ்போர்ட் அப்ளை செய்யும் விண்ணப்பதாரர்கள் ஏதாவது குற்ற செயல்களை செய்துள்ளார்களா, ஏதாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை மட்டுமே போலீசார் சரிபார்த்து வந்தனர்.
இந்நிலையில் கூடுதலாக வெளிநாடு செல்ல பாஸ்போர்ட்டிற்கு அப்ளை செய்யும் நபர் ஏதாவது சமூக ஊடகங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளில் சிக்கியுள்ளாரா என்பதையும், ஆராய்வதற்கான புதிய நடைமுறையும் அமலுக்கு வர உள்ளது என உத்தரகாண்ட் காவல்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய உத்தரகாண்ட் காவல்துறைத் தலைவர் அசோக் குமார், 'இன்றைய காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் நடத்தையும் ஆராயப்பட வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது.
பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக நடத்தைகளைச் சரிபார்க்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகத்தான் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூக ஊடகங்களில் வளர்ந்து வரும் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், சமூக ஊடகப் பயனர்கள் அதிகப் பொறுப்புடன் இயங்குவதற்கும் தடுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் பாஸ்போர்ட் சட்டத்தில் ஏற்கெனவே உள்ள ஒரு விதிமுறையை அமல்படுத்துவதற்கு ஆதரவான ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்கவேண்டும். மற்றபடி இதன் மூலம் புதிய அல்லது கடுமையான சட்டவிதிகள் எதையும் நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
