"இதை வச்சுக்கிட்டா பணத்துக்கு கஷ்டப்பட்டீங்க".. மருத்துவ செலவால் திணறிய குடும்பம்.. வீட்டுல இருந்த ஓவியத்தை பாத்துட்டு ஷாக்-ஆன அதிகாரி..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தை சேர்ந்த வயதான நபர் ஒருவர், மருத்துவ செலவு காரணமாக கஷ்டத்தில் இருந்தவேளையில் அவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.
தொலைந்துபோன பொக்கிஷம்
லண்டனை சேர்ந்த பணி ஓய்வுபெற்ற நபர் ஒருவர் தனது வீட்டில் பழைய ஓவியத்தை பராமரித்து வந்திருக்கிறார். அவரது தந்தை கொடுத்த அந்த ஓவியத்தை தனது கட்டிலுக்கு மேலே, மாட்டியிருக்கிறார் அவர். ஆனால், அதன் மதிப்பு அவருக்கு தெரிந்திருக்கவேயில்லை. 30 வருடங்களாக தனது வீட்டில் இருந்த ஓவியம் பற்றி அந்த வீட்டினருக்கும் தெரியவில்லை. இதனிடையே வயதான அந்த பெண்மணிக்கு டிமென்ஷியா எனப்படும் நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சோகம்
90 வயதான அந்த பெண்மணிக்கு நோய் தாக்குதல் குறித்து மருத்துவர்கள் கூறியதும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவரை பராமரிக்கவும் மருத்துவ செலவுகளுக்கும் நிதி தேவைப்பட்டதால் வேறுவழியின்றி வீட்டையே விற்க முடிவெடுத்துள்ளனர். அதன்பிறகு, ஏல நிறுவனத்தை நாடியுள்ளனர் குடும்பத்தினர். சில நாட்களில், ஏல நிறுவனத்தில் இருந்து நிபுணர் ஒருவர் வீட்டை பார்வையிட வந்திருக்கிறார்.
அப்போது வயதான பெண்மணியின் கட்டிலின் மேலே மாட்டப்பட்டிருந்த ஓவியத்தை பார்த்து திகைத்து நின்றிக்கிறார் அந்த அதிகாரி. அதுகுறித்து குடும்பத்தினரிடம் சொல்ல, மொத்த குடும்பமும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றுவிட்டது. காரணம், அது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிலிப்பினோ லிப்பி என்னும் பிரபல ஓவியரால் வரையப்பட்டது.
ஏலம்
ஓவிய உலகில் மாஸ்டர் பீஸாக கருதப்படும், இந்த ஓவியம் எங்கே இருக்கிறது என்பதே பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கிறது. தற்போது வீடு ஏலத்தில் விடுவதாக வயதான பெண்மணியின் குடும்பத்தினர் அறிவித்திருந்ததை தொடர்ந்து, தற்போது பல வருட தேடலுக்கு விடை கிடைத்திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் இந்த ஓவியம் 2,55,000 யூரோக்களுக்கு (2 கோடி ரூபாய்) எல்லாம் போயிருக்கிறது.
மருத்துவ செலவுக்காக திணறிய குடும்பத்துக்கு, ஓவியம் மூலமாக ஜாக்பாட் அடித்திருப்பது இங்கிலாந்து முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Also Read | உலகத்தின் மிகப்பெரிய செடி.. அதுவும் கடலுக்குள்ள.. அடேங்கப்பா இவ்வளவு கிலோமீட்டருக்கா வளந்திருக்கு.!