எத்தனையோ பேர் INSTAGRAM-ல லவ் பண்ணி கல்யாணம் செஞ்சிருக்கலாம்.. ஆனா இந்த ஜோடி மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல்.. குவியும் வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்ஸ்டாகிராம் மூலம் வாய் பேச முடியாத இருவர் பழகி காதலித்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள ஜகிதியா மாவட்டத்தின் ராய்கல் மண்டலத்தைச் சேர்ந்த அத்ரம் லதா என்கிற ஜோதி. ஆந்திரப்பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோலைச் சேர்ந்தவர் அருண். இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாகி பழகி வந்துள்ளனர். இதனை அடுத்து இருவருக்குள்ளும் நல்ல புரிதல் இருந்ததால் அது காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
வாய்பேச முடியாத இரு மாற்றுத்திறனாளிகளிடையே உருவான அன்பிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு குவிந்தது. இதனை அடுத்து அத்ரம் லதா-அருண் திருமணத்தை நடத்த ஜாகிடியவைச் சேர்ந்த முகமது பாபுஜான், ரியாஸ் மற்றும் கசரபு ரமேஷ் ஆகிய சமூக சேவகர்கள் முன்வந்தனர். திருமணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் செய்தனர். பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். மேலும் இளம் தம்பதி புதிதாக மண வாழ்க்கையை ஆரம்பிக்க தேவையான பொருட்களையும் வழங்கினர்.
ஆகியோரது இதுகுறித்து தெரிவித்த சமூக சேவைக்குழு, ‘கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு நாங்கள் உதவிகள் செய்தோம். இப்படியொரு ஜோடிக்கு உதவியதை நாங்கள் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறோம். ஒருவரையொருவர் உளமார காதலிக்கும் இந்த ஜோடிக்கு திருமணத்தை நடத்தி வைத்து, அவர்கள் குடும்பம் நடத்த தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கியுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளனர்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் சிறப்பாகத் தொடர்புகொள்வதற்காக, டெல்லியில் உள்ள இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 2018-ல் 3000 ISL சொற்களைக் கொண்ட ISL அகராதியின் முதல் பதிப்பை உருவாக்கியது. 2019-ல் 6000 சொற்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.