தமிழ் எழுத்துக்களால் ஆனந்த் மஹிந்திராவை வரைந்த இளைஞர்.. வைரல் கேப்ஷனுடன் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > கதைகள்பழமையான தமிழ் எழுத்துக்களால் இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திராவின் முகத்தை வரைந்துள்ளார் தமிழக இளைஞர் ஒருவர். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
காஞ்சிபுரத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில். 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் ஆனந்த் மஹிந்திராவின் உருவத்தினை அவர் வரையும் காட்சிகள் அமைந்துள்ளது. மேலும், இதுபோன்ற முயற்சியில் தான் முதன்முறையாக ஈடுபடுவதாகவும், இதுகுறித்து தங்களின் கருத்தை அறிய ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
என் வீட்டுல மாட்டணும்
தமிழக இளைஞர் கணேஷ் வரைந்த ஓவியத்தை பாராட்டியுள்ள ஆனந்த் மஹிந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில்,"ஆஹா, என் உருவப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பப்படுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் மஹிந்திராவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் கணேஷ். அந்த பதிவில்,"நன்றி சார். உங்களுடைய வேலைப்பளுவுக்கு மத்தியில் நீங்கள் அளித்திருக்கும் பதில் என்னை நெகிழ வைத்திருக்கிறது. இதை என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது. இந்த புகைப்படத்தை உங்களுக்கு விரைவில் அனுப்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவை பழமையான தமிழ் எழுத்துக்களால் தமிழக இளைஞர் ஒருவர் வரையும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது , நான் வியக்கிறேன்.
தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக , உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்.. https://t.co/9nAyMAlUAK
— anand mahindra (@anandmahindra) May 23, 2022

மற்ற செய்திகள்
