"1,000-க்கும் அதிகமான தேனீக்கள்".. 20 ஆயிரம் முறை கொட்டிய சம்பவம் .. இளைஞருக்கு நடந்தது என்ன??
முகப்பு > செய்திகள் > உலகம்இளைஞர் ஒருவர், மரம் வெட்டிக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென அரங்கேறிய அசம்பாவிதமும் அதன் பின்னர் அவருக்கு நேர்ந்த சம்பவமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவர் ஆஸ்டின் பெல்லாமி (Austin Bellamy). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது நண்பர் ஒருவருக்காக எலுமிச்சை மரங்களை வெட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில், எதிர்பாராத சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறி உள்ளது. எலுமிச்சை மரத்தினை வெட்டிக் கொண்டிருந்த போது தவறுதலாக அருகே இருந்த தேனீக் கூட்டில் ஆஸ்டின் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், அதில் இருந்த தேனீக்கள், வேகமாக கலைந்து செல்லவே, அங்கிருந்த ஆஸ்டினை அனைத்து தேனீக்களும் கொட்ட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. சுமார் ஆயிரக்கணக்கான தேனீக்கள், முகம், கழுத்து, தலை என உடலின் பல பகுதிகளில் மொத்தமாக இருபது ஆயிரத்துக்கும் மேல் சரமாரியாக கொட்டித் தீர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஸ்டின், கோமாவில் இருந்த நிலையில், தற்போது அவர் வென்டிலேட்டரில் இருக்கிறார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது மருத்துவ செலவுகளை செலுத்துவதற்காக ஆன்லைன் நிதி திரட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, ஆஸ்டின் மரத்தில் இருந்த சமயத்தில், தேனீக்கள் கொட்ட ஆரம்பித்த போது, அவரது குடும்பத்தினர் கீழே இருந்ததாக கூறப்படுகிறது.
தரையில் இருந்து அவருக்கு நடந்ததை பார்த்த போதும் அவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை இருந்ததால், அவரை காப்பாற்ற முயற்சி செய்ய முடியவில்லை. இது ஒருபுறம் இருக்க, சுமார் 30 தேனீக்கள் வரை ஆஸ்டின் உட்கொண்டதாகவும், அவற்றினை அகற்ற மருத்துவர்கள் ஒரு நாளுக்கு மேல் வரை எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே வேளையில், ஆஸ்டின் முழுமையாக குணமடைவார் என்றும் மருத்துவர்கள் அவரின் உறவினர்களிடம் கூறி உள்ளார்கள். ஒரே இளைஞரை சுமார் 1000 தேனீக்கள் 20,000 தடவை வரை கடித்துள்ள விஷயம், பலரையும் கதி கலங்க வைத்துள்ளது.
Also Read | "ஆறு வருசமா love பண்ணி, ஒண்ணா ஊர் சுத்துனோம், ஆனா".. காதலன் யாருன்னு தெரிஞ்ச உண்மை.. உடைந்து போன இளம்பெண்!!

மற்ற செய்திகள்
