"ஹே, பேன்ட் பாக்கெட்டுல என்னப்பா அது?".. விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கிய வாலிபர்.. "பல வருசமா இத தான் வேலையா வெச்சு இருக்காராம்"

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Aug 25, 2022 03:45 PM

உலகிலுள்ள ஏராளமான விமானங்களில், அவ்வப்போது ஏதாவது பொருட்களை எடுத்துக் கொண்டு செல்லும் பயணிகள் சிக்கி, சக பயணிகள் முன்னிலையில் பரபரப்பை உண்டு பண்ணுவது பற்றி பல செயதிகள் அடிக்கடி வலம் வந்த வண்ணம் உள்ளன.

America police enquiry on youth about smuggling

Also Read | ஊர் முழுவதும் வறட்சி.. "11 கோடி வருச 'மர்மம்' வெளிய வந்துருக்கு".. ஆடி போன ஆராய்ச்சியாளர்கள்!!

சமீபத்தில் கூட, சென்னை, டெல்லி உள்ளிட்ட விமானங்களில் வேறு நாடுகளில் இருந்து வரும் பயணிகள், தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்திக் கொண்டு அதிகாரிகளிடம் சிக்குவார்கள்.

அப்படி தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நபர் ஒருவர், விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளிடம் சிக்கிய நிலையில், அவரை சோதித்து பார்த்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

தெற்கு கலிபோர்னியா பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ் மானுவேல் பெரெஸ். இவர் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு வந்த ஒரு விமானத்தில் இருந்து அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார். அப்போது, ஜோஸ் மானுவேலை சோதித்து பார்த்த போது, அவரது உடல் மற்றும் பாக்கெட் உள்ளிட்ட இடங்களில், பாம்புகள், பல்லிகள் என 60-க்கும் மேற்பட்ட ஊர்வன விலங்குகள் மறைத்து வைத்து கடத்த முயன்றதும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து, அந்த நபரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மெக்சிகோ மற்றும் ஹாங்காங் வழியாக, கடந்த ஆறு வருடங்களுக்குள் சுமார் 1,700 விலங்குகளை அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக கடத்தி வந்த சதித் திட்டத்தின் பின்னால், ஜோஸ் இருந்ததும் தெரிய வந்தது.

மேலும், சில சமயங்களில் அவரே விலங்குகளை பல வழிகளில் கடத்தி உள்ளதாகவும், மற்ற நேரங்களில் சிலரிடம் பணம் கொடுத்து அவர்களுக்கே தெரியாமல் பெட்டிகள் மற்றும் லக்கேஜுகள் மூலம் கடத்தியதையும் ஒப்புக் கொண்டார். அதே போல, இதுவரை Yucatan box ஆமைகள், Mexican box ஆமைகள், இளம் முதலைகள் மற்றும் Mexican beaded பல்லிகள் உட்பட பல உயிரினங்களை அமெரிக்கா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்று, 739,000 டாலர்கள் வரை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

முன்னதாக, அதிகாரிகளிடம் அவர் சிக்கிய போது, ஆரம்பத்தில் செல்லப்பிராணிகள் என கூறியதாகவும், பின்னர் சந்தேகத்தில் அவரை சோதனை செய்த போது தான், இடுப்பு, கால் சட்டை மற்றும் லக்கேஜ் உள்ளிட்ட இடங்களில், 60 உயிரினங்கள் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதில், நிறத்தை மாற்றும் அரிய பாம்பு உள்ளிட்ட பல உயிரினங்கள் இருந்துள்ளது.

மேலும் கடத்தலின் போது, மூன்று உயிரினங்கள் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இரண்டு குற்றங்களை அவரே ஒப்புக் கொண்டதையடுத்து, மிகப் பெரிய கடத்தல் புள்ளியாக இருந்த ஜோஸ் மானுவேலுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | வெளிநாட்டுக்கு டூர் போன தம்பதி.. திரும்பி வந்ததும் காத்திருந்த கடிதம்.. "நாங்க வெளியூர்'ல இருக்குறப்போ இது எப்படி நடந்துச்சு??"

Tags : #POLICE #AMERICA POLICE ENQUIRY #YOUTH #SMUGGLING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. America police enquiry on youth about smuggling | World News.