முதல்ல ஏர்டெல்... இப்ப வோடபோன் ஐடியா.. 'நாட் ரீச்சபிள்' ரீசார்ஜ் கட்டணம்! அடுத்தது ஜியோ?
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்தப்படியாக வோடபோன் - ஐடியா நிறுவனமும் தங்களின் சேவை கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இயங்கி வரும் ஏர்டெல் நிறுவனம் நேற்று தங்களின் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்தது.
இந்திய மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஜியோ மற்றும் ஏர்டெல் என்ற இரு நிறுவனங்களின் ரீசார்ஜ் ப்ளான்களும் கிட்டத்தட்ட ஒரே விலையிலேயே தொடர்ந்து வந்தன. ஆனால், நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி ஏர்டெல் நிறுவனம் தனது வழக்கமான ரீசார்ஜ் ப்ளான்களின் விலையை 20% முதல் 25% வரை உயர்த்தியுள்ளது.
ஏர்டெலில் குறைந்தபட்சமாக 79 ஆக இருந்த ரீசார்ஜ் அமௌன்ட் தற்போது 99 ரூபாயாக உயர்ந்துள்ளது. ரூ219க்கு ரீச்சார்ஜ் செய்தால் அன்லிமிடட் கால் மற்றும் தினசரி 1ஜிபி டேட்டா கொண்ட 28 நாட்களுக்கான சேவையின் மதிப்பு தற்போது 265 ரூபாயாக உயர்ந்துள்ளது.
நேற்று ஏர்டெல் அறிவித்த சேவை கட்டணத்தை கண்டு ஏர்டெல் வாடிக்கையாளர்கள் வாயை பிளந்த நிலையில் இன்று வோடபோன் - ஐடியா (Vi) நிறுவனமும் செல்போன் சேவை கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்து வாயை பிளக்க வைத்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தை போல வோடபோன் - ஐடியா (Vi) நிறுவனமும் தங்கள் பிரீபெய்டு கட்டணங்களை 20 - 25% வரை உயர்த்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை மறுநாள் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.