‘என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா..?’ இளம் இந்திய வீரரைப் பார்த்து பதாகையை காட்டிய ரசிகை.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Nov 23, 2021 01:37 PM

கொல்கத்தா மைதானத்தில் பெண் ரசிகை ஒருவர் இளம் இந்திய வீரரைப் பார்த்து திருமணம் செய்துகொள்ளுமாறு பாதகையுடன் நின்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

KL Rahul fan girl want marriage during IND vs NZ match

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதன் கடைசி டி20 போட்டி நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

KL Rahul fan girl want marriage during IND vs NZ match

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் ஷர்மா 56 ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை மிட்சல் சாண்ட்னர், டிரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், லோக்கி பெர்குஷன் மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

KL Rahul fan girl want marriage during IND vs NZ match

இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் இந்தியாவின் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், ஹர்சல் படேல் 2 விக்கெட்டுகளும், சஹால், தீபக் சஹார் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியின் போது பெண் ரசிகை ஒருவர், இந்திய அணியின் இளம் வீரர் கே.எல்.ராகுலை திருமணம் செய்துகொள்ள வேண்டி பாதகையை காண்பித்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

Tags : #KLRAHUL #INDVNZ #FANGIRL #MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. KL Rahul fan girl want marriage during IND vs NZ match | Sports News.