நாம தனியா வெளிய எங்கையாச்சும் மீட் பண்ணலாமா...? 'ஃபேஸ்புக்ல ஆக்டிவா இருக்குற பொண்ணுங்க தான் டார்கெட்...' - ஸ்பாட்டுக்கு போன அப்புறம் தான் அவங்க நோக்கம் என்னன்னு தெரிஞ்சிருக்கு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுவாக முகநூலில் நட்பாகி பழகி வருபவர்களுக்கு ஒரு சில நேரங்களில் முகம் சுளிக்கும் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அதேபோல் ஒரு சம்பவம் நேற்று (29-04-2021) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் முகநூல் மூலம் பழகிய இருவர் அந்த பெண்ணை தனியாக சந்திக்க அழைத்துள்ளனர். நண்பர்கள் தானே என நம்பி அவர்களை சந்திக்க சென்றத்தில் அப்பெண் அணிந்த நகைகளை எல்லாம் சுருட்டிக் கொண்டு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவங்கள் குறித்து சங்கராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து, திருவண்ணாமலை திருக்கோவிலூர் பிரிவு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்நேரத்தில், ஒரு சொகுசு காரில் வந்த இளைஞர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார், கௌதம் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தவே, இந்த இளைஞர்கள் தான் முகநூல் மூலம் கள்ளக்குறிச்சி பெண்ணை ஏமாற்றியது தெரியவந்தது.
அதோடு இந்த இளைஞர்கள் குழுவாக செயல்பட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் ஆபாச வார்த்தைகளை கூறி பாலியல் தவறுகளை செய்து, நகைகளை கொள்ளை அடிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சொகுசு கார், 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், விலை உயர்ந்த பைக், பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

மற்ற செய்திகள்
