'21-வது வயதில் 1.2 கோடி சம்பளம்'...ஐஐடி தேர்வில் தோற்றாலும் எப்படி சாத்தியமானது?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Mar 29, 2019 04:39 PM

ஐஐடியில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வில் தோல்வியுற்ற போதும்,தனது விடா முயற்சியால் கூகுள் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார் மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

Google gives Mumbai lad Abdullah Khan Rs 1.2 crore job

மும்பையை பூர்விகமாக கொண்டவர் அப்துலா கான்.இவருக்கு ஐஐடியில் சேரவேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகும்.அதற்காக கடுமையாக முயன்றும் ஐஐடி நுழைவு தேர்வில் வெற்றி பெற முடியாமல் போனது.இதனால்  ஸ்ரீ எல்ஆர் திவாரி என்ற பொறியியல் கல்லூரியில் தனது பி.இ- கணினி பொறியியல் படிப்பை தொடர்ந்தார்.இதனிடையே சமீபத்தில் புரோகிராமிங் சேலஞ் ஒன்றின் மூலம் கானின் புரொபைலை பார்வையிட்ட கூகுள் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தது.

அதனை ஏற்று நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வுகளை எதிர்கொண்ட அவர்,அதில் வெற்றியும் பெற்றார்.இதனை தொடர்ந்து இறுதி தேர்வுக்காக லண்டன் சென்றார்.அங்கும் வெற்றி பெற்ற அப்துலா கானை,வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் அலுவலகத்தில் சேருமாறு பணிநியமன ஆணையையும் வழங்கியது.அதன் பின்பு தான் அப்துலா கானிற்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

வருடத்திற்கு சம்பள தொகையாக ஒரு கோடியே 20 லட்சம் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்தது.இதனை சற்றும் எதிர்பாராத அப்துலா கான் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்.வழக்கமாக ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பயில்பவர்களுக்கு தான் கூகுள் போன்ற நிறுவனங்கள் இது போன்ற ஊதியத்தில் பணி வழங்கும் என்ற கூற்று உண்டு.ஆனால் ஐஐடி தேர்வில் தோற்ற பின்பும் தனது விடா முயற்சியால் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கும் அப்துலா கான் நிச்சயம் ஒரு ஹீரோ தான்.

Tags : #GOOGLE #ABDULLAH KHAN #IIT #RS 1.2 CRORE