"முடி கொட்டுறது நிக்கவே இல்ல".. TREATMENT எடுத்தும் சரி ஆகாத விரக்தியில் இருந்த இளைஞர்.. துயர சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாபல ஆண்டுகளாக தொடர்ந்து தனக்கு தலை முடி உதிர்ந்து வந்ததால் இளைஞர் எடுத்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | ரோஹித்துக்கு என்னங்க ஆச்சு??.. வெளியான பரபரப்பு தகவல்.."அரை இறுதி நெருங்குற நேரத்துலயா இப்டி??"
கேரளா மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து முடி உதிரும் பிரச்சனை இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் சற்று வழுக்கை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக, கேலி கிண்டலுக்கும் பிரசாந்த் ஆளாகி வந்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் தனது தலை முடி உதிர்தல் பிரச்சனையை எப்படியாவது சரி செய்ய வேண்டுமென பிரசாந்த் முடிவு எடுத்துள்ளார்.
அதன்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு வழுக்கையை சரி செய்து தலை முடி வளர வேண்டும் என மருத்துவர் ஒருவரை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளார் பிரசாந்த். இதற்காக மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை தவறாமல் பிரசாந்த் உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. முடி உதிர்தல் சரியாக தலையில் முடி வந்து விடும் என பிரசாந்த் கருதி இருக்க, எல்லாம் தலை கீழாக நடந்துள்ளது.
தலையில் முடி எதுவும் வளராமல் இருந்த முடியும் கொட்டியதுடன் புருவம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பிரசாந்துக்கு முடி கொட்ட தொடங்கி உள்ளது. சிகிச்சை பெற்று மருந்து எடுத்துக் கொண்டு வந்த பிறகும் முடி கொட்டுவது நிற்கவில்லை என கடும் மன வேதனையிலும் பிரசாந்த் இருந்து வந்ததாக தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் விபரீத முடிவை எடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் பிரசாந்த். இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரசாந்தின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். முடி உதிர்தல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நபருக்கு முடி கொட்டுவது அதிகமானதன் காரணமாக விபரீத முடிவை எடுத்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில் அவர் எடுத்த முடிவு, பலரையும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

மற்ற செய்திகள்
