"இன்னும் கொஞ்ச நாளுல".. FORIEGN போக வேண்டிய பையன்.. இரவில் வந்த போன் கால்?.. காலையில் கிராம மக்கள் கண்ட அதிர்ச்சி!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இளைஞர் ஒருவர் காட்டுப் பகுதியில் உயிரிழந்து கிடந்த நிலையில், இது தொடர்பாக போலீசாருக்கு கடும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியை அடுத்த பொய்யூர் என்ற கிராமம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த கிராமத்திற்கு வெளியே உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதை அப்பகுதியில் சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக இது பற்றி கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதன் பின்னர், இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டும் வந்தனர்.
இதில், உயிரிழந்து கிடந்த வாலிபர் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த புகழேந்தி - ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் விக்னேஷ் என்பது தெரிய வந்துள்ளது. ஐடிஐ படித்துள்ள விக்னேஷ், சிங்கப்பூருக்கு செல்வதற்காக காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, இரவு நேரத்தில் தனக்கு வந்த அழைப்பின் பெயரிலேயே வீட்டில் இருந்து விக்னேஷ் கிளம்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது பற்றிய தீவிர விசாரணையில், தனது நண்பர்களான தர்மராஜ் மற்றும் பிரபாகரன் ஆகியோருடன் இரவு நேரத்தில் மது அருந்தவும் விக்னேஷ் சென்றதும் தெரிய வந்தது. மூன்று பேரும் மது அருந்திக் கொண்டிருந்த போது, விக்னேஷ் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, விக்னேஷை கொலை செய்ததற்கான காரணத்தை விசாரித்த போது மது அருந்திக் கொண்டிருந்த சமயத்தில், கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் ஷர்மா, கோலி உள்ளிட்டோரை திட்டியதால் ஆத்திரத்தில் இப்படி செய்ததாகவும் தர்மராஜ் விசாரணையில் குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால், வெறும் காரணத்திற்காக தர்மராஜ் இப்படி சொல்கிறாரா அல்லது கொலை காரணத்தை மறைப்பதற்காக அப்படி சொல்கிறாரா என்பதை அறிய தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்
