"புலிக்குட்டி விற்பனைக்கு".. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர் பரபரப்பு கைது.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுவாக, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பலரும் நாய்க் குட்டி, பூனை குட்டி, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் விற்பனைக்கு இருப்பதாக புகைப்படத்துடன் பதிவிடுவதை நாம் பார்த்திருப்போம்.
Also Read | ரயில் வரும்போது நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிய பயணி! அதிர்ஷ்டவசமாக தப்பிய நிமிடங்கள்
ஆனால், இளைஞர் ஒருவர் புலிக்குட்டி விற்பனைக்கு இருப்பதாக கூறி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்ட சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்களாக, சென்னை மற்றும் வேலூர் பகுதிகளில் புலிக்குட்டி ஒன்று விற்பனைக்கு உள்ளதாக புகைப்படத்துடன் கூடிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வந்தது. இது முற்றிலும் உண்மை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் புலிக்குட்டியின் விலை 25 லட்சம் வரை என்றும், புக் செய்தால் 10 நாட்களில் டெலிவரி செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அது மட்டுமில்லாமல், புலிக்குட்டி விற்பனைக்கு இருக்கும் விஷயம், வேலூர் வனத்துறையினர் பார்வைக்கும் சென்றுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணையிலும் அவர்கள் இறங்கி உள்ளனர். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞர் தான் புலிக்குட்டி விற்பனைக்கு இருப்பதாக ஸ்டேட்டஸ் போட்டது தெரிய வந்துள்ளது.
இவர் வேலூர் மாவட்டம், சார்ப்பனாமேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருவதும் தெரிய வந்துள்ளது. பார்த்திபனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும், அவர் தான் இதில் முக்கிய புள்ளி என்றும் கண்டறியப்பட்ட நிலையில், அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், எத்தனை பேர் இந்த சம்பவத்தில் தொடர்பில் உள்ளார்கள் என்பதையும் அறிந்து வருகின்றனர். அதே போல, புலிக்குட்டி நிஜமானது தானா என்ற கோணத்திலும் அப்படி நிஜம் என்றால், எங்கிருந்து அவர்கள் இதனை கடத்தி விற்பனை செய்து வருகிறார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Also Read | பேட்டால் அடிக்க ஓங்கிய பாகிஸ்தான் வீரர்... களத்தில் சண்டை போட்ட வீரர்கள்.. உச்சகட்ட சர்ச்சை!!