'முத்தம் கொடுத்து' அன்பை பரப்பிய 'முத்த பாபா...' 'கொரோனாவையும்' சேர்த்து பரப்பியதால் 'வந்த வினை...'
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியபிரதேசத்தில் முத்த பாபா என்ற சாமியாரிடம் இருந்து பலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களில் மத்தியப்பிரதேசமும் இடம்பெற்றுள்ளது. அங்கு ரத்லாம் மாவட்டத்தில் ‘முத்த பாபா’ என்ற சாமியார் பிரபலமாக இருந்தார். பக்தர்களுக்கு கையில் முத்தம் கொடுத்து அருள் வழங்கும் இவருக்கு உள்ளூரில் பக்தர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த நான்காம் தேதி முத்த பாபா, கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அம்மாவட்டத்தில், 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரித்ததில், 19 பேர் முத்த பாபாவை சந்தித்ததாக கூறியுள்ளனர். அவர் தங்களது கையில் முத்தமிட்டதையும் கூறியுள்ளனர்.
இவர்களில் 13 பேர் நாயபுரா என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். வட்டார மருத்துவ அலுவலர் பிரமோத் பிரஜபதி கூறுகையில், மொத்தம் 24 பேருக்கு முத்த பாபா தொடர்பில் இருந்து கொரோனா தொற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.