VIDEO: அடக்கடவுளே..! நாம அடிச்ச ‘சிக்சர்’ இப்படி நமக்கே ஆப்பு வச்சிருச்சே.. தலையில் கை வைத்து உட்கார்ந்த பேட்ஸ்மேன்.. விழுந்து விழுந்து சிரித்த வீரர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மேன் அடித்த சிக்சர் அவரது கார் கண்ணாடியையே உடைத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் யார்க்ஷயர் (Yorkshire) மைதானத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில், Illingworth St Mary’s cricket club அணியும், Sowerby St Peters CC அணியும் மோதின. இதில் Illingworth St Mary’s cricket club வீரர் ஆஷிப் அலி பேட்டிங் செய்த போது, பந்து ஒன்றை சிக்சருக்கு விளாசினார்.
ஆனால் பந்து மைதானத்தை தாண்டிச் சென்று வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆஷிப் அலியின் காரிலேயே விழுந்தது. இதனால் அவரது காரின் பின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதைப் பார்த்த ஆஷிப் அலி அப்படியே தலையில் கைவைத்து கீழே அமர்ந்துவிட்டார்.
அப்போது மைதானத்தில் இருந்த சக வீரர்கள் மற்றும் அம்பயர்கள் வாய் விட்டு சிரித்தனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் கலகலப்பு நிலவியது. இந்த நிலையில் Illingworth St Mary’s cricket club தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Illingworth St Mary’s CC (@IllingworthCC) June 20, 2021

மற்ற செய்திகள்
