VIDEO: ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல கார் ஷோரூம்...! 6.4 லட்சம் ரூபாய் 'பில்' கட்டிட்டு கார 'ஸ்டார்ட்' செய்த நபர்...! 'கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்...' - பதற வைக்கும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐதராபாத்தில் வாடிக்கையாளர் புதிதாக வாங்கிய காரை முதன்முதலாக ஓட்டும்போது ஷோரூமில் இருந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அல்காபுரி டாடா மோட்டார்ஸ் கார் ஷோரூம் இயங்கி வருகிறது. கார் ஷோரூமுக்கு வந்த வாடிக்கையாளர் பகவத் என்பவருக்கு அந்தக்கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து Rs 6.4 லட்சம் பணம் கொடுத்து காரை வாங்கியுள்ளார். அதை அங்கிருக்கும் வளைவு வழியாக ஓட்டி கீழே கொண்டு வர வேண்டும்.
காரின் உள்ளே பகவத்தும், அவரின் 2 மகன்களும் ஏறி உட்கார்ந்துள்ளனர். அப்போது, அந்த வாடிக்கையாளர் காரை ஸ்டார்ட் செய்தவுடன் ஆக்சிலேட்டரை வேகமாக அமுக்கி அதிவேகமாக இயக்கி உள்ளார்.
கார் முதல் தளத்தில் இருந்து கண்ணாடி தடுப்பை உடைத்துக்கொண்டு தரை தளத்தில் சாலையோரம் நின்றிருந்த மற்றொரு காரின் மீது தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த எதிர்பாராத சம்பவத்தால், காரில் இருந்த பகவத் மற்றும் சிறுவன் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கார் முதல் தளத்தில் இருந்து கீழே விழும் வீடியோ அந்த ஷோரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
