திருதிருன்னு முழிச்ச பயணி.. BAG கைப்பிடி மேல ஆபிசருக்கு வந்த சந்தேகம்.. எவ்வளவு ட்ரிக்கா வேலை பாத்துருக்காரு.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jan 30, 2023 01:41 PM

டெல்லி விமான நிலையத்தில் டிராலி பேக் கைப்பிடியில் வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற நபரை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.

Passenger hiding foreign currency worth Rs 64L in trolley handles held

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | அமைச்சர் மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு.. திறப்பு விழாவுக்கு வந்தபோது நடந்த விபரீதம்.. பதைபதைக்கும் பின்னணி..!

சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை கடத்திவரும் நபர்களை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்வது வாடிக்கையாகிவிட்டது. அதேபோல, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சிக்கும் கடத்தல் நபர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படி கைதானவர்கள் கடத்தலுக்கு உபயோகிக்கும் வழிமுறைகள் மிகவும் வித்தியாசமானவையாக இருக்கும்.

அந்த வகையில் புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் வினோதமான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு பயணி வந்திருக்கிறார். பேங்காக் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானத்திற்காக காத்திருந்த அவரிடம் வழக்கம் போல சோதனைகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அவருடைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமாக இருப்பதை அதிகாரிகள் கண்டதும் அவரை தனியாக அழைத்து சென்று விசாரணை செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர்.

Passenger hiding foreign currency worth Rs 64L in trolley handles held

Images are subject to © copyright to their respective owners.

அதன் அடிப்படையில் அவருடைய உடைமைகளை எக்ஸ்ரே ஸ்கேனர் மூலமாக அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அந்த சோதனையின் போது அவருடைய ட்ராலி பேக்கின் கைப்பிடியில் பணக்கட்டுகள் இருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். இதனை அடுத்து அந்த ட்ராலி பேக்கின் கைப்பிடியை அதிகாரிகள் அகற்றிய போது உள்ளே வெளிநாட்டு பணம் சுருள் சுருளாக மடிக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்திருக்கிறது. அதில் 68,400 யூரோ மற்றும் 5000 நியூசிலாந்து டாலர் இருந்ததாக சிஐஎஸ்எப் அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

Passenger hiding foreign currency worth Rs 64L in trolley handles held

Images are subject to © copyright to their respective owners.

அந்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூபாய் 64 லட்ச ரூபாய் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் சுங்கத்துறை அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதனிடையே டிராலி கைப்பிடியில் இருந்து சுருள் சுருளாக மடிக்கப்பட்ட பணக்கட்டுகளை அதிகாரிகள் வெளியே எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 64 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கடத்தி தப்பிச் செல்ல முடிகின்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுடெல்லி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read | "மேட்ச் ப்ரஷர் ஆகும்போது".. தோனி கொடுத்த அட்வைஸ்.. ஆப்கான் வீரர் உருக்கம்.. .. 'Captain Cool'-ன்னு சும்மாவா சொல்றாங்க..?!

Tags : #AIRPORT #PASSENGER #HIDE #FOREIGN CURRENCY #TROLLEY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Passenger hiding foreign currency worth Rs 64L in trolley handles held | India News.