"மேட்ச் ப்ரஷர் ஆகும்போது".. தோனி கொடுத்த அட்வைஸ்.. ஆப்கான் வீரர் உருக்கம்.. .. 'CAPTAIN COOL'-ன்னு சும்மாவா சொல்றாங்க..?!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கொடுத்த அறிவுரையை இன்றும் பின்பற்றி வருவதாக தெரிவித்திருக்கிறார் ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா ஸாதுரான்.
![Afghanistan Najibullah Zadran get advice from MSD at 2015 WC Afghanistan Najibullah Zadran get advice from MSD at 2015 WC](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/afghanistan-najibullah-zadran-get-advice-from-msd-at-2015-wc.jpeg)
Images are subject to © copyright to their respective owners.
பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் மகேந்திர சிங் தோனியை 'மிஸ்டர் கூல்' என்றும் 'தல' என்றும் அன்போடு அழைக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை இந்தியாவிற்காக 90 டெஸ்ட் 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர் தோனி. இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது.
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் துவங்கிய 2008 ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணியின் கேப்டனாகவும் தோனி தொடர்கிறார். எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தோனிக்கு ஏகபோக வரவேற்பு இருக்கும்.
Images are subject to © copyright to their respective owners.
ரசிகர்கள் மட்டும் அல்லாது இளம் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் ஆதர்சமாக திகழ்பவர் தோனி. அவர்களுள் ஒருவர் தான் ஆப்கானிஸ்தான் அணியின் நஜிபுல்லா ஸாதுரான். அந்த அணியின் முக்கிய வீரராக அறியப்படும் நஜிபுல்லா தற்போது ILT20 தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தோனி தனக்கு கொடுத்த அறிவுரை பற்றி பேசியிருக்கிறார் நஜிபுல்லா.
2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தான் ஆப்கானிஸ்தான் அணிக்கு முதல் உலகக்கோப்பை தொடராகும். அந்த தொடரில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி இருந்தது ஆப்கானிஸ்தான். அப்போது தோனியிடம் பேச தனக்கு வாய்ப்பு கிடைத்ததாக கூறியுள்ளார் நஜிபுல்லா.
Images are subject to © copyright to their respective owners.
இதுகுறித்து பேசிய அவர்," தோனி தான் என் ஹீரோ. இன்னிங்க்ஸை அவர்போல யாராலும் ஃபினிஷ் செய்ய முடியாது. அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். 2015 உலகக் கோப்பையில் நான் தோனியிடம் பேசினேன், அப்போது அவர் என்னை அமைதியாக இருக்கவும், அதிக அழுத்த சூழ்நிலைகளில் கூட என்னை நானே நம்பவும் சொன்னார். நான் இன்னும் அந்த அறிவுரையை நம்புகிறேன் மற்றும் பின்பற்றுகிறேன்" என தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து தோனி ரசிகர்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பேசி வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)