‘நீங்கதான் பர்த்டே பேபியா.. கொஞ்சம் பீச் பக்கம் வாங்க’.. கலக்கிய கான்ஸ்டபிள்.. குவியும் பாராட்டுக்கள்!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Apr 03, 2019 11:49 AM

காவல் பணி என்பது பணி மட்டுமல்ல, அது பொறுப்பான சேவை. தன் நலத்தை தாண்டிய சமூக நோக்கம்தான் இங்கு பிரதானம். இதைத்தான் எபின் கிறிஸ்டோபர் என்கிற போலீஸ் கான்ஸ்டபிள் நிரூபித்திருக்கிறார்.

chennai PC makes youngsters to clean beach after their party

மாலை 4 மணி முதல் இரவு 1 மணி வரை சென்னை எலியாட் பீச்சில்தான் எபின் கிறிஸ்டோபருக்கு பணி. வழக்கத்தைப் போல் அன்றும் பணிக்கு வந்தவர் அங்கு கேக் வைக்கும் அட்டைப்பெட்டிகள் சிதறிக்கிடந்ததை பார்த்துள்ளார். கிட்டத்தட்ட  அந்த 19 அட்டைப்பெட்டிகளிலும் இருந்த கேக்கினை சாப்பிட்ட்டுவிட்டு பொறுப்பின்று இஷ்டத்துக்கும் போட்டுவிட்டு சுற்றுப்புறத்தை நாசம் செய்த அந்த கும்பலை டியூட்டி கான்ஸ்டபிள் கிறிஸ்டோபர் பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.

அதனால் கேக்கின் அட்டைப்பெட்டியில் இருந்த கேக்-ஷாப்பின் பெயரை வைத்து அந்த ஷாப்புக்கு போன் செய்து ஆர்டர் விபரங்களை வைத்து 19 கேக் ஆர்டர் செய்த அந்த இளைஞர் கும்பலின் போன் நம்பரை வாங்கியுள்ளார். பிறகு அந்த நம்பருக்கு அழைத்துப் பேசி தன்னை பார்க்க பீச் ரோட்டுக்கு வருமாறு அந்த இளைஞர்களுக்கு கிறிஸ்டோபர் அழைப்பு விடுத்துள்ளார்.

சுமார் 10 பேர் கொண்ட அந்த இளைஞர் குழு வந்ததும், அவர்கள் செய்த தவறை உணரச் செய்யும் வகையில் அந்த கேக் அட்டைகளை பொறுக்கி குப்பைத் தொட்டிகளில் போடச்சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார். அவர்களும் தாமதிக்காமல் உடனே கிறிஸ்டோபரின் வார்த்தைகளை ஏற்று, தாங்கள் செய்ய வேண்டிய பொறுப்பை உணர்ந்து கடமையாற்றியுள்ளனர். 

எபின் கிறிஸ்டோபரின் இந்த அதிரடியான செயலால் காவல்துறை மேலதிகாரி பலரும் அழைத்து பாராட்டியுள்ளனர். மேலும் நெட்டிசன்களும் இவரது இந்த செயலை பாராட்டி இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் கிறிஸ்டோபர் தற்போது காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார். 

Tags : #POLICE #CLEAN #CHENNAI #VIRAL