'குடிக்கிறியா இல்லயா..??' துணைநிலை ராணுவ வீரருக்கு மேலதிகாரிகளால் நேர்ந்த கொடூரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jun 10, 2019 11:42 AM
மது அருந்தச் சொல்லி துணை நிலை ராணுவ வீரரை, அவருடைய மேலதிகாரிகள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் சங்வி காவல் நிலையத்தில் வந்ததுதான் இத்தகைய புகார். ஆர்மி ஜவான் ஒருவரை அவருடைய ராணுவ மேலதிகாரியும் இன்னும் 3 அதிகாரிகளும் சேர்ந்து குடிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளதால், அந்த ஜவான் மன ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தன்னை கடுமையாகத் தாக்கியதாகவும், துன்புறுத்தியதாகவும் ஜவான் அளித்துள்ள குற்றச் சாட்டின்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், தாக்கப்பட்ட ஜவானுக்கு முழு உடற் பரிசோதனை எடுக்கப்படுவதாகவும், ஜவானை தாக்கிய மேலதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சங்வி காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, மேலதிகாரியான மேஜரும் அவருடன் இன்னும் 3 அதிகாரிகளும் சேர்ந்த, பாதிக்கப்பட்ட ஜவானை தங்களுடன் அமர்ந்து மது அருந்தச் சொல்லி வற்புறுத்தியதாகவும், ஆனால் ஜவானோ மிக தீர்க்கமாக அதை மறுத்ததால், அவருடைய மேலதிகாரிகள் திடீரென அவரை அடிக்கத் தொடங்கியதாகவும், மீண்டும் தொடர் தாக்குதல் நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
