தினமும் குடிச்சிட்டு வந்து ஒரே தொல்லை.. வீட்டில் கேட்ட கணவனின் அலறல் சத்தம்.. மனைவி செய்த பரபரப்பு காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தினமும் குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி தீ வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்தவர்கள் தம்பதி துரைப்பாண்டி-முத்துமாரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான துரைப்பாண்டி தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி குடிபோதையில் வந்த துரைப்பாண்டி மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்துமாரி, துரைப்பாண்டி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி வலியில் அலறியுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் துரைப்பாண்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த துரைப்பாண்டி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து கணவனைக் கொலை செய்த வழக்கில் மனைவி முத்துமாரியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் தினமும் குடித்துவிட்டு வந்து தொல்லை செய்த கணவனை மனைவி கட்டையால் அடித்து கொலை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
