சென்னையில் மது போதையில் 21 வயது பெண் செய்த காரியம்.. பதறிப் போன மக்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: சென்னை பாரிஸில் பெண் ஒருவர் குடிபோதையில் பேருந்து கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதையினால் உருவாகும் பிரச்சனைகள்:
போதை என்பது உடல்நலத்திற்கு மட்டும் அல்லாமல் சமூக கேடாக மாறி வருகிறது. இதன் காரணமாக பல குற்ற செயல்கள் நடைபெறுகிறது. பொதுசொத்துகள் அதிகமாக சேதப்படுத்துவது தொடர்கதையாகி வருகிறது. ஆண்கள் மட்டும் அல்லாமல் தற்போது அதிகளவில் பெண்களும் மது அருந்துவது புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பெண்களும் குடித்து விட்டு சில குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கான்கிரீட் கல்லை பேருந்தின் மீது வீச்சு:
நேற்று முன்தினம் இரவு பாரிமுனையில் இருந்து தடம் எண் 35 கொண்ட மாநகர பேருந்து கொரட்டூர் பகுதிக்கு புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோடு வழியாக சென்றபோது, நடைபாதையில் நின்றிருந்த 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் திடீரென சாலையில் கிடந்த கான்கிரீட் கல்லை எடுத்து பேருந்தின் மீது வீசியுள்ளார். இதனால் வண்டியை ஓட்டி வந்த ஓட்டுனர், நடத்துனர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பேருந்தை நிறுத்திய ஓட்டுனர்:
இந்த சம்பவத்தில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியுள்ளது. உடனடியாக சுதாரித்து கொண்ட டிரைவர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பெண் கல்லெறித்து எறிந்த இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி போலீசார், அந்த இளம்பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அதில் அந்தப்பெண், அம்பத்தூர் ரயில்வே நடைமேடையில் வசிக்கும் வேளாங்கண்ணி (21) என தெரியவந்துள்ளது. மேலும், அவர் மது போதையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்
