தயவுசெஞ்சு அவர திருப்பி கொடுத்திடுங்க.. கணவனை தேடி காட்டுக்கு போன மனைவி.. அந்த நேரம் பார்த்து எடுத்த முடிவு.. போலீசார் அதிர்ச்சி
முகப்பு > செய்திகள் > இந்தியாசட்டிஸ்கர்: மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் மூலம் கடத்தப்பட்ட கணவரை தேடி பெண் ஒருவர் காட்டுக்குள் சென்ற விஷயம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தனியார் கட்டுமான கம்பெனியில் இன்ஜினீயராக பணிபுரிந்து வருபவர் அசோக் பவார் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் யாதவ். இவர்கள் இருவரையும் சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கடத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதை அறிந்த மனைவி மிகவும் நொந்து போனார். என்ன நடக்க போகிறது என அவரை பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆனாலும் எப்படியாவது அவரை காப்பாற்றி விட வேண்டும் என்ற நம்பிக்கை இருந்தது.
உருக்கமான ஒரு வீடியோ :
இந்த நிலையில் அசோக் பவார் அவர்களின் மனைவி சோனாலி பவார் தனது இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு தன் கணவரை விடுவிக்குமாறு மிகவும் உருக்கமான ஒரு வீடியோ பதிவை ஒன்றை பதிவு செய்து மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
காட்டுக்கு கணவனை தேடி சென்ற மனைவி:
மேலும், இதனை தொடர்ந்து சோனாலி பவார் தன்னுடைய கணவரை மீட்பதற்காக, உள்ளூர் செய்தியாளரின் உதவியுடன் தன்னுடைய இரண்டரை வயது மகளுடன் அபுஜிஹ்மட் (abujhmad) காட்டுக்குள் சென்றுள்ளார். கணவரை தேடி சோனாலி காட்டுக்குள் சென்ற அதே நேரத்தில் தான் மாவோயிஸ்ட்கள் அசோக் பவார் மற்றும் அவரது உதவியாளர் ஆனந்த் யாதவ் ஆகிய இருவரையும் கடந்த செய்வாய் அன்று மாலை விடுவித்துள்ளனர்.
விசயத்தை கேள்விப்பட்டு காவல் துறையினர் அதிர்ச்சி:
சோனாலி யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் கணவரை தேடி சென்ற சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் கடந்த புதன்கிழமை உதவி காவல் கண்காணிப்பாளர் பங்கஜ் ஷுக்லா இதுக்குறித்து பேசுகையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இருவரும் பத்திரமாக இருப்பதாகவும், சோனாலி இன்னும் உள்ளூர் பத்திரிகையாளருடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், விரைவில் குற்று பகுதிக்கு வந்து சேர்வார் என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
