ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் கைது ஏன் .. கோவை மாவட்ட காவல்துறை பரபரப்பு விளக்கம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 04, 2022 09:46 PM

கோவை:  ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோர்  கைது செய்யபட்டது ஏன் என்பது குறித்து கோவை மாவட்ட காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

Why rowdy baby Surya arrested.. Coimbatore police explain

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 31.12.2021 ம் தேதி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த புகார்தாரர் ஒரு YOUTUBE CHANNEL நடத்தி வந்துள்ளார். அதில் விழிப்புணர்வு மற்றும் சினிமா அப்டெட் வெளியிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சுப்புலட்சுமி (எ) ரவுடி, பேபி சூர்யா நடத்தி வரும் Surya Media மற்றும்

சிக்கந்தர்ஷா (எ) சிக்கா நடத்தி வரும் Singer Sikka Official என்ற YOUTUBE CHANNEL களில் புகார்தாரரை பற்றி மிகவும் இழிவாகவும் ஆபாசமாகவும் உருவ கேலி செய்தும் தொடர்ந்து பேசிவந்துள்ளார். மேலும் தொடர்ந்து சமூக இணையதளத்தில் ஆபாசமாகவும் இழிவாகவும் பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டு கொண்டிருக்கும் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா (எ) சிக்கா ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரைப் பெற்று கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம்

பிரிவுகள் 294(b), 354(A), 354(D), 509 109 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகள், 56(D) 67 IT ACT 2000 மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் சட்டப்பிரிவு 4 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Why rowdy baby Surya arrested.. Coimbatore police explain

மேற்படி வழக்கு சம்மந்தமாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர உயர்திரு. எ.சுதாகர் இளப் அவர்கள் உத்தரவின் பேரிலும் கோவை சரசு காவல்துறை துணை தலைவர் உயர்திரு, எம்.எஸ். முத்துசாமி  அவர்களின் அறிவுரையின் பேரிலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செவ்வநாகரத்தினம்  அவர்களின் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  கஹாசினி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயதேவி மற்றும் உதவி ஆய்வாளர் திரு ரமேஷ் மற்றும் போலீசார் சகிதம் 04.01.2022 ம் தேதி மதுரையில் தங்கியிருந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர்ஷா ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று செல்போன்களை ஆய்வுக்காக கைப்பற்றியும் கைதிகள் இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.

Why rowdy baby Surya arrested.. Coimbatore police explain

 மேலும் இவர்கள் சமூக வலைதளங்களில் சமூகத்தையும் இளைஞர்களையும் சீரழிக்கும் தவறான விஷயங்களை பதிவு செய்து வருகிறார்கள்; இதனால் சமூகத்தில் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லக்கூடும் என்பதால் இவர்களது youtube channel களை முடக்குவதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்று சமூக வலைதளத்தில் சமூக நலளையும் இளைஞர்களையும் சீர்கெடுக்கும். தவறான கருத்துகளையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களை பதிவிடுவோரின் சேளல்கள்: முடக்கப்பட்டு அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளார்  எச்சரித்துள்ளார்.

கப்பல்ல திருட வரல.. அவங்க திருடுனதே கப்பலைத்தான் – ஸ்கெட்ச் போட்டு கப்பலைக் கடத்திய தீவிரவாதிகள்..!

Tags : #ROWDY BABY SURYA #ARREST #COIMBATORE #ரவுடி பேபி சூர்யா #சிக்கந்தர் #கைது

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Why rowdy baby Surya arrested.. Coimbatore police explain | Tamil Nadu News.