நான் ஜெயிச்சா வரும்னு சொன்னேன்...! 'சொன்ன மாதிரியே வந்திடுச்சு பாருங்க...' - வானதி சீனிவாசன் போட்ட 'வைரல்' ட்வீட்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன்னுடைய வெற்றிக்கு பின் வலிமை அப்டேட் வந்துள்ளதாக கோவையின் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் வலிமை பட அப்டேட் கேட்டு அனைவரையும் அன்பு டார்ச்சர் செய்த 'தல' ரசிகர்களின் மனம் குளிரும் விதமாக நேற்று (11-07-2021) வலிமை படத்தின் முதல் மோஷன் போஸ்டர்,first look வெளிவந்தது.
இதற்கு முன்பு கோவையின் பாஜக எம்எல்ஏ வானதி அவர்களின் ட்விட்டர் பக்கத்தையும் விட்டுவைக்காமல் தேர்தலின் போது வலிமை அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் அலப்பறை செய்து வந்தனர்.
அதற்கு பதிலளித்த அவர், நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என கிண்டலாக கூறியிருந்தார்.
இந்நிலையில் அதனை நியாபகம் வைத்திருந்த வானதி சீனிவாசன் தனது சுட்டுரையில், நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது எனப் பதிவிட்டுள்ளார்.
#ValimaiUpdate -> #ValimaiUpdated
நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்து விட்டது 😌😌😅😇 pic.twitter.com/Yc1DANGJlg
— Vanathi Srinivasan (@VanathiBJP) July 11, 2021

மற்ற செய்திகள்
