கோவை : சமூக வலைத்தளத்தில், ஆபாசமாக பேசி வந்ததாக புகார் எழுந்த நிலையில், ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் டிக் டாக் என்னும் செயலி, தற்போது தடை செய்யப்பட்டிருந்தாலும், இது பயன்பாட்டில் இருந்த சமயத்தில், மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று இருந்தது.
இந்த செயலி மூலம் பலரும், நடனம், நடிப்பு என தங்களது திறனை வெளிப்படுத்தி வந்தாலும், மறுபக்கம் அதிகம் சர்ச்சைகளைத் தான் இந்த செயலியின் பயனாளிகள் உருவாக்கினர்.
சும்மா தாறுமாறா இருக்கு.. மாநாடு பார்த்து மிரண்ட இயக்குனர்.. என்ன சொன்னாரு தெரியுமா?
டிக் டாக் பிரபலம்
ஆபாசமாக வீடியோ மற்றும் கருத்துக்களை பதிவிடுதல் என டிக் டாக்கின் நெகடிவ் சைட் மூலம் புகழ் பெற்றவர்கள் ஏராளம். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யாவும் இதன் மூலம் அதிக பிரபலம் அடைந்தார். டிக் டாக் மீது பித்து பிடித்து திரிந்த சூர்யா, தனது முழு நேரத்தையும் அந்த செயலியில் தான் ஈடுபடுத்திக் கொண்டார். இதன் காரணமாக, அவரது கணவர் மற்றும் குழந்தைகளையும் கவனிக்காமல், பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
காதலனுடன் சேர்ந்து வீடியோ
இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு, சமூக வலைத்தளங்கள் மற்றும் யூ டியூப் மூலம், தொடர்ந்து வீடியோக்கள் பதிவிட்டு வந்துள்ளார் சூர்யா. இவர் தனியாக இல்லாமல், அவரின் காதலன் சிக்கா என்பவருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
வாழ்க்கையிலேயே பெரிய கொடும இது தான்.. இயக்குனர் செல்வராகவன் செய்த ட்வீட்.. என்னவா இருக்கும்??
அதிகரித்த எதிர்ப்பு
இந்நிலையில் தான், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகியோரின் வீடியோக்களில், அதிக ஆபாச வார்த்தைகள் மற்றும் இருவரும் இணைந்து தவறாக நடந்து கொள்கிறார்கள் என்ற புகார் எழுந்தது. இதனால், இருவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சில பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. அதே போல, கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
கைது செய்த போலீசார்?
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் மீது நடவடிக்கை மேற்கொண்ட கோவை சைபர் க்ரைம் போலீசார், மதுரையில் பதுங்கி இருந்த சூர்யா மற்றும் அவரின் காதலன் சிக்கா ஆகியோரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, அவர்களை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.