மைதானத்தில் பும்ரா செய்த மாஸ் சம்பவம்.. அதுக்கு அவங்க மனைவி குடுத்த ரியாக்ஷன் தான் ஹைலைட்டே

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Jan 04, 2022 07:36 PM

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பும்ரா செய்த மாஸ் சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

bumrah six in rabada over leave wife sanjana ganesan smile

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோதி வருகின்றன.

ஆரம்பமே தடுமாற்றம்

இதில், டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, ஆடிய இந்திய அணியில், சிறிய இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. ராகுல் 50 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற தொடக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினார்கள். இறுதியில், அஸ்வின் 46 ரன்கள் எடுக்க, ஒட்டுமொத்தமாக 202 ரன்களை இந்திய அணி எடுத்தது.

மாஸ் காட்டிய பும்ரா

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. ஷர்துல் தாக்கூரின் அபார பந்து வீச்சில், தென்னாப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷர்துல் 7 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இதனிடையே, இந்திய அணியின் பேட்டிங்கில், கடைசியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா களமிறங்கியிருந்தார். இவர், தென்னாப்பிரிக்க  அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஓவரில், 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து, அனைவரையும் மெய் சிலிர்க்க செய்தார்.

ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்

இதில், ரபாடா ஷார்ட் பால் ஒன்றை, பும்ராவிற்கு வீசினார். இதனை ஹூக் ஷாட் முறையில் அடித்த பும்ரா, பவுண்டரி கோட்டிற்கு வெளியே அதிரடியாக பந்தை அனுப்பினார். அவரின் இந்த அடி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இவை அனைத்தையும் விட, ஹைலைட்டான ஒரு விஷயம் அதன் பிறகு, மைதானத்தில் அரங்கேறியது.

மனைவியின் அசத்தல் ரியாக்ஷன்

பும்ராவின் மனைவியான சஞ்சனா கணேசன், மைதானத்தில் இந்த போட்டியைக் கண்டு களித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது கணவர் சிக்ஸர் அடித்ததும், மகிழ்ச்சியில் கைத் தட்டி சிரித்து ரசித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இப்படி சிக்ஸர் அடிப்பது என்பது அரிதாக நடைபெறும் காரியம் தான்.

 

அப்படி ஒரு சூழ்நிலையில் பும்ரா சிக்ஸ் அடித்து, அதனை அவரது மனைவியும் கண்டு களித்தது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Tags : #JASPRIT BUMRAH #SANJANA GANESAN #IND VS SA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bumrah six in rabada over leave wife sanjana ganesan smile | Sports News.