VIDEO: அபிஷேகம் செய்தபோது திடீரென கண் திறந்த ‘ஐயப்பன்’ சிலை.. கோவையில் நடந்த அதிசயம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் ஐயப்பன் சிலை கண் விழித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோவை செல்வபுரம் தில்லைநகரில் மணிகண்ட சுவாமி கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் கார்த்திகை மாதத்தை ஒட்டி சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை 40-ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது.
அப்போது ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் சுமார் 3000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அதில் ஒரு சிலர் சுவாமிக்கு நடைபெற்ற பூஜைவை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதில் ஐயப்பன் சிலை கண்விழிப்பது போன்ற காட்சி ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
உடனே இதுகுறித்து தங்களது உறவினர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிடவும் வைரலாகியுள்ளது. தற்போது அப்பகுதி மக்கள் ஐயப்ப சுவாமி கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மற்ற செய்திகள்
