நம்ம பூனைங்க 'அம்மா' ஆக போறாங்க! ஊரே ஒண்ணுக்கூடி வாழ்த்தணும்.. கர்ப்பிணி பூனைகளுக்கு நடந்த வளைகாப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை: கோயம்பத்தூரில் வீட்டில் வளர்க்கும் கர்ப்பிணி பூனைகளுக்கு, அதன் உரிமையாளர் வளைகாப்பு விழா நடத்திய சம்பவம் அனைவரிடையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செல்லப் பிராணிகள் மேல் ஆர்வம்:
பொதுவாக எதிர்பார்ப்பு இல்லாமல் அன்பு காட்டுவதால் தற்போது நிறைய வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகின்றனர். பழைய காலத்தில் மனிதர்கள் ஒருவரையொருவர் உறவாடுவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது தான் அன்பு காட்டுவதற்கும், கொண்டாட்டமான விழாக்களை எடுப்பதற்கும் செல்லப் பிராணிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ப்ரிஸியன் வகை பூனைகள்:
கோயம்பத்தூர் மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியில் வாழ்ந்து சேர்ந்தவர்கள் உமா மகேஸ்வர் மற்றும் சுபா தம்பதிகள். இவர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தனர். எனவே, இவர்களது வீட்டில் செல்லப்பிராணிகளாக ஜீரா, ஐரிஸ் என 2 ப்ரிஸியன் வகை பெண் பூனைகளை மிகவும் அன்பாக வளர்த்து வருகின்றனர். இந்த பூனைகள் நாட்டு பூனைகள் மாதிரி அல்ல. அதற்கான தனி உணவு, உடைகள், மருத்துவம் என ஸ்பெஷல் கவனிப்புகள் செய்ய வேண்டும்.
இந்த நிலையில், பூனைகளை சமீபத்தில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது அவை கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த உரிமையாளர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
வளைகாப்பு:
இதனையடுத்து, கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போன்று, தங்களது செல்ல பூனைகளுக்கு வளைகாப்பு விழா நடத்த உமா மகேஷ்வர் - சுபா தம்பதியனிர் முடிவு செய்தனர். இந்த நிலையில், கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் செல்லப்பிராணிகள் நிலையத்தில் நேற்றைய தினம் வளைகாப்பு விழா நடந்தது. இதற்காக, பூனைகள் ஜீரா, ஐரிஸ் இருவருக்கும் ஸ்பெஷல் உடைகள் அணிவிக்கப்பட்டு, அலங்காரம் செய்திருந்தனர்.
வளையல்கள் அணிவித்து நடந்த விழா:
அதனைத் தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு செய்வது போலபூனைகளுக்கும் கறுப்பு, வெள்ளை ஆகிய நிறத்திலான வளையல்களை அணிவித்த தம்பதியினர், அவற்றுக்கு பாரம்பரிய மிட்டாய், இனிப்பு வகைகள் பழங்கள், பிஸ்கட்டுகள் மற்றும் பூனைகளுக்காக தயாரிக்கப்படும் சாக்லெட் வைத்து நிகழ்ச்சியை ஊரை கூட்டி வெகு விமர்சையாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஊர்மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு, பூனைக்கு வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சியை கண்டு வியந்தனர்.

மற்ற செய்திகள்
