அடிக்கடி திட்டிய அப்பா.. மகன் எடுத்த விபரீத முடிவு.. கதறிய தாய்.. "கடைசி'ல அவங்களும்".. நெஞ்சை நொறுக்கும் சோகம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகன் எடுத்த விபரீத முடிவும், அதன் பின்னர் தாய் செய்த காரியமும், கடும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
Also Read | "அட, இது எப்படி இங்க??".. வெளிவந்த 5 லட்சம் ஆண்டு பின்னணி.. ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் கண்டெடுத்த அற்புதம்!!
சென்னை வியாசர்பாடி கரிமேடு பகுதியின் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (வயது 55). இவர், ஆயிரம் விளக்கு பகுதியில் பிரின்டிங் பிரஸ் ஒன்றை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ரகுநாதனின் மனைவி பெயர் இளவரசி. மேலும், இவர்களின் ஒரே மகன் தான் சுசில்.
பி காம் படித்துள்ள சுசில், கொடுங்கையூர் பகுதி அருகே அமைந்துள்ள நடனப் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன் காரணமாக, நடன பள்ளியில் உள்ள வகுப்புகள் முடித்து விட்டு வீடு திரும்பும் சுசில், இரவு நேரங்களில் பெரும்பாலும் தாமதமாகவே வருவதை பழக்கமாக கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனால், சுசிலின் தந்தையான ரகுநாதன், இரவு நேரங்களில் தாமதமாக வீடு திரும்பி வருவதற்கு அவரை திட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக, தந்தை மகன் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், சமீபத்தில் தனது அறைக்குள் சென்ற சுசில், திடீரென விபரீத முடிவை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, நீண்ட நேரமாக மகன் சுசில் அறையில் இருந்து வெளியே வராததால், தாய் இளவரசி பதாற்றம் அடைந்துள்ளார். இதன் பின்னர், அவரது அறைக்குள் சென்று பார்த்த இளவரசிக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுசிலை மீட்டு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். மகனின் நிலையை அறிந்ததும் கண்ணீர் விட்டு கதறித் துடித்துள்ளார் இளவரசி.
இதனையடுத்து வீட்டிற்கு சென்ற இளவரசி, மகனின் அறைக்கு சென்று அவரை போலவே விபரீத முடிவையும் எடுத்துள்ளார். சுசிலின் நிலையால், அவரது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் உடைந்து போன நிலையில், இளவரசி எடுத்த முடிவும் அவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. மகன் விபரீத முடிவை எடுத்ததால், வேதனையில் இருந்த தாயும் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.