"அட, இது எப்படி இங்க??".. வெளிவந்த 5 லட்சம் ஆண்டு பின்னணி.. ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் கண்டெடுத்த அற்புதம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Sep 06, 2022 01:58 PM

உலகிலுள்ள பல இடங்களில் தொடர்ந்து பல்வேறு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்புள்ள விஷயங்கள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Israel elephant tusk unearthed 5 lakh years old

Also Read | "எண்ணி முடிக்க 2 மணி நேரம் ஆகிடுச்சு".. 8 மூட்டையில் 10 ரூபாய் நாணயங்கள்.. வாயடைத்து போன பைக் ஷோரூம் ஊழியர்கள்

அப்படி ஆய்வுகள் மேற்கொள்ளும் சமயத்தில் அவர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்க முடியாத பல விஷயங்கள் அவர்கள் ஆய்வு முடிவுகளில் வெளி வந்து அதில் ஈடுபட்டு வந்தவர்களை மட்டுமில்லாமல், உலகில் உள்ள மக்கள் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

அப்படி ஒரு விஷயம் தான், தற்போது இஸ்ரேல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்து பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

Israel elephant tusk unearthed 5 lakh years old

இஸ்ரேலின் தென்பகுதியான ரேவதிம் என்னும் பகுதி அருகே அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தொல்பொருள் ஆணையத்தினால் இந்த அகழ்வாராய்ச்சி முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், மிகப் பழமையான யானையின் தந்தம் ஒன்றை அந்த இடத்தில் கண்டெடுத்துள்ளனர். சுமார் அரை மில்லியன் ஆண்டுகளுக்கு பழமையான யானையின் தந்தம் இது என கூறப்படும் நிலையில், வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் சமூக நடமாட்டங்களுக்கு சான்றாகவும் இவை பார்க்கப்படுகிறது. சுமார் 2.6 மீட்டர் நீளமுள்ள யானையின் தந்தம், 150 கிலோ எடை வரை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Israel elephant tusk unearthed 5 lakh years old

அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புள்ள யானை தந்தம் கிடைத்தது பற்றி இந்த பணியின் முதன்மை இயக்குனர் ஏவி லெவி பேசுகையில், இந்த தந்தத்தை மிக மிக பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், இந்த தந்தத்தை கொண்டிருந்த யானை நேரான தந்தம் கொண்ட யானையாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதே போல, சுமார் நான்கு லட்சம் வருடங்களுக்கு முன்பே அந்த யானை அழிந்து போயிருக்கும் என்றும், தந்தத்தை போலவே விலங்குகளை வெட்டவும் தோலுரிக்கவும் பயன்படுத்தும் பிளண்ட் எனப்படும் கருவியையும் அவர்கள் கண்டெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Israel elephant tusk unearthed 5 lakh years old

மேலும், இந்த யானையின் தந்தத்தை வைத்து பார்க்கையில் அதற்கு சொந்தமான யானை சுமார் 16.5 அடி வரை இருந்திருக்க வேண்டும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அந்த கணக்கில் தற்போதைய ஆப்பிரிக்க யானைகளை விடவும் உயரம் அதிகமாக இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் படி இங்கு மனிதர்கள் இருந்தது குறித்து எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிகிறது. மேலும் அவர்கள் உபயோகப்படுத்தி விட்டு குப்பையில் எறிந்த பொருட்கள் மட்டுமே கிடைத்து வருகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Israel elephant tusk unearthed 5 lakh years old

Also Read | "எல்லாருக்கும் ரொம்ப நன்றி".. ரசிகர்களை நொறுங்க வைத்த ரெய்னாவின் ட்வீட்.. "இப்டி ஒரு முடிவை எடுத்துட்டாரே"

Tags : #ISRAEL #ELEPHANT #ELEPHANT TUSK #ISRAEL ELEPHANT TUSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Israel elephant tusk unearthed 5 lakh years old | World News.