'பேட்டிங் மட்டுமில்ல...' 'அதுலையும்' மாஸ் காட்டுவோம்...! 'டீம்ல சேர்க்காத நிலையில்...' 'டிவிட்டரில் ஃபோட்டோ ஷேர் செய்த வீரர்...' - ரசிகர்கள் விரக்தி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து தொடருக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெறாதத்தால் தன் மனகுமுறலை வெளிப்படுத்தும் விதமாக இந்திய வீரர் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஐசிசி டி-20 கிரிக்கெட் தொடரில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராகி வருகிறது.
தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா பதவியேற்ற நிலையில் ராகுல் டிராவிட் கோச்சிங்கில் புதிதாக இந்திய அணி உருவாக்கப்படுகிறது.
வரும் அக்டோபர் மாதம் 17-தேதி தொடங்கவுள்ள இந்த தொடரில், 3 டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்களை பிபிசிஐ வெளியிட்டுள்ளது.
அதில் முன்னணி வீரர்களான கோலி, பும்ரா வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதோடு, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், இஷான் கிஷான் என 3 விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், ஐபிஎல்லின் நட்சத்திர வீரரான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், சஞ்சு சாம்சன் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார். இது பிசிசிஐக்கு சாம்சன் அளித்த மறைமுக பதிலடியாக உள்ளது. என்னையா இந்திய அணியில் சேர்க்கவில்லை என்பது போல பேட்டிங், விக்கெட் கீப்பிங் மட்டுமல்ல, ஃபீல்டராகவும் சிறப்பாக இருப்பேன் என்ற வகையில் பவுண்டரி எல்லைகளில் மிக கடினமான கேட்ச்களை தாவி பிடித்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
— Sanju Samson (@IamSanjuSamson) November 10, 2021