ஐயப்பன் கோவிலுக்கு போன பக்தர் வாங்கிய லாட்டரிக்கு விழுந்த ₹80 லட்சம்.. பரிசு வென்றவரை தேடியலையும் கடை உரிமையாளர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசபரிமலைக்கு சென்ற பக்தர் ஒருவர் வாங்கிய லாட்டரிக்கு 80 லட்ச ரூபாய் பரிசு கிடைத்திருப்பதாகவும், கடையின் உரிமையாளர் அந்த பக்தரை தேடிவருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read | ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்.. நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு..!
தமிழகத்தில் லாட்டரி விற்பனை அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த சிலர் கேரளா செல்லும்போது அங்கு லாட்டரி வாங்கி தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிப்பதை வாடிக்கையாகவும் கொண்டுள்ளனர். அதுபோன்ற சம்பவம் தான் தற்போதும் நடந்திருக்கிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திபெற்ற ஐயப்பன் திருக்கோவில். கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்கிய உடனேயே பக்தர்கள் சபரிமலைக்கு இருந்து சாமி தரிசனம் செய்ய துவங்குவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுகளுக்கான கோவில் நடை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. அது முதலே லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் தமிழக - கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவு எனும் இடத்தில் லாட்டரி டிக்கெட் ஒன்று வாங்கியிருக்கிறார். அதன்பிறகு அவர் அங்கிருந்து கிளம்பி கோவிலுக்கு சென்றுவிட்ட நிலையில் அவர் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசான 80 லட்சம் ரூபாய் விழுந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பக்தர் தனது லாட்டரிக்கு பரிசு விழுந்ததா? இல்லையா? என்பது குறித்து இன்னும் அறியவில்லை என தெரிகிறது.
மேலும், இந்த பரிசுத் தொகைக்கு உரிமைகோரி யாரும் வரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில், அந்த ஐயப்ப பக்தருக்கு லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்த உரிமையாளர் அந்த பக்தரை தேடிவருவதாகவும் தெரிகிறது. இதுகுறித்து அந்த லாட்டரி கடை உரிமையாளர் பேசுகையில், அந்த லாட்டரி டிக்கெட்டை ஐயப்ப பக்தர் ஒருவர் தான் வாங்கியதாகவும் அவரை தற்போது தான் தேடிவருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.