"பணம் இருக்குப்பே பதவி வேணுமுல்ல".. 94 வயதில் கவுன்சிலர் கனவு.. யார் இந்த வியப்பில் ஆழ்த்தும் வொண்டர் வுமன்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான இன்று பலரும் வேட்புமனுத்தாக்கல் மிகவும் மும்முரம் காட்டி வருகின்றனர்.
நாளுக்குநாள் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு வரும்போது பல வித்தியாசங்களை முன்னிறுத்தியும் மறைமுகமாக ஏதோ கருத்தைக் கூறுவது போலவும் பொருட்களை ஏந்தியபடி வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மதுரையில் போட்டியிடும் வேட்பாளர் மதுமிதா கையில் சிலம்புடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதுபோல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வேட்பாளர்கள் பல வித்தியாசங்களை மனு தாக்கலின் போது அரங்கேற்றுகின்றனர்.
அந்த வரிசையில் பொருள்களில் என்ன வித்தியாசம் இருக்கிறது நானே ஒரு பெரிய வித்தியாசம் கூறுவதுபோல், சென்னையில் 94 வயது மூதாட்டி ஒருவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
பலரது அரசியல் கனவு களுக்கு இந்த மூதாட்டியின் முன்னெடுப்பு பலரையும் கவர்ந்து வருவதோடு மேலும் பாட்டிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி வரை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் என தமிழகத்திலுள்ள 649 நகர உள்ளாட்சி களுக்கும் வார்டு வரையறை செய்யப்பட்ட படி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது
கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் 21 வயது அடைந்த இளைஞர்கள் பலரும் தேர்தலில் பங்கேற்றனர். அதில் சிலர் வெற்றியும் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் தற்போது தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 94 வயதான மூதாட்டி ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் 21 வயதுக்கு மேல் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம் என்ற அறிவிப்பு உள்ளது.
அவரின் இந்தச் செயல் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. சென்னை பெசன்ட் நகர் மைக்கோ காலனி பகுதியை சேர்ந்த காமாட்சியும் பாடி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 174 வது வார்டில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அவரது சொத்து மதிப்பு ரூபாய் 90 லட்சத்து 61 ஆயிரத்து 835 உள்ளதாக வேட்பு மனுவில் கூறியுள்ளார். இந்த வயதிலும் பாட்டி இந்த தேர்தல் கனவு பலரது தேர்தல் ஆசைகளுக்கு உந்துதலாக இருக்கும் என இந்த மூதாட்டியின் வேட்புமனுத்தாக்கல் தெரிவித்துள்ளதாக பலரும் பாட்டியை பாராட்டி வருகின்றனர்.
காங். அமைச்சரை சிக்க வைக்க மாடல் அழகி மூலம் மாஸ்டர் பிளான்! ஹோட்டல் அறையில் விபரீதம்